LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

இந்த வார ராசி பலன் (27.6.2014 முதல் 3.7.2014 வரை)

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


27/6/2014, 4:19 pm

மேஷம்:

பொது: சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எந்த விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் நலம் மேம்படும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவரை அனுசரித்துச் சென்று பிரச்சனைகளை தவிர்க்கவும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை நீங்களே சமாளித்துவிடுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடையக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். உங்கள் பொறுப்பில் உள்ள ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வியாபாரிகள் கூட்டாளிகளின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கவும்.


ரிஷபம்

பொது: தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் திறமை பளிச்சிடும். நீண்டகாலமாக நடக்காத விஷயம் ஒன்று நல்லபடியாக நடக்கும். உடல் நலம் பாதிக்கப்படலாம்.

பெண்களுக்கு: ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. கணவர் பாசமாக இருப்பார். குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்கள். பெரியவர்களை அனுசரித்துச் செல்லவும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். தடைபட்ட காரியங்களும் நல்லபடியாக நடக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்க காலதாமதமாகலாம். வியாபாரிகள் லாபம் பெறுவர்.


மிதுனம்

பொது: உங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். உறவினர்கள் பாராமுகமாக இருப்பார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வரவுக்கேற்ற செலவும் உண்டு.

பெண்களுக்கு: கணவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக பேச வேண்டாம். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். இல்லை என்றால் காயம் ஏற்படலாம். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவும்.

வேலை பார்ப்போருக்கு: வருமானத்திற்கு குறைவிருக்காது. கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்படவும்.

கடகம்

பொது: சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். வழக்குகள் சாதகமாக முடியும். பயணங்களால் நன்மை உண்டு.

பெண்களுக்கு: குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொறுமையாக இருப்பது நல்லது. உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். அதனால் வேலை பளு குறையும். எந்த வேலையையும் பிறகு செய்யலாம் என்று நினைக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

சிம்மம்

பொது: எதிரிகளின் பலம் குறையும். பண வரவுவ சீராக இருக்கும். மனதில் ஏதோ ஒருவகையான குழப்பம் இருக்கும். தியானம், யோகா ஆகியவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

பெண்களுக்கு: கணவர் பாசமாக இருப்பார். அதனால் குதூகலமாக காணப்படுவீர்கள். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். மனம் மகிழும் செய்தியை கேட்பீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லை என்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரிகளுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் இருக்காது.

கன்னி

பொது: பண வரவு அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்தபடியே தீர்ப்பு கிடைக்கும். முகத்தில் புதுப்பொலிவு ஏற்படும்.

பெண்களுக்கு: கணவர் மீது பாச மழை பொழிவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தை பெருக்க முயற்சி செய்வீர்கள்.

துலாம்

பொது: யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உங்கள் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் பிரச்சனை ஏற்படலாம்.

பெண்களுக்கு: மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். கணவன் மனைவி இடையேயான அன்பும், பாசமும் அதிகரிக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: சிறப்பாக பணியாற்றி பாராட்டு பெறுவீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் ஆதரவு சுமாராகவே இருக்கும். வியாபாரிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

பொது: எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். எதிரிகள் கூட தானாக வந்து உதவி செய்வார்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு: குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து மகிழ்வீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள். குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு அதிக ஆதாயத்துடன் கூடிய வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சக ஊழியர்களை நம்ப வேண்டாம். வியாபாரிகளுக்கு வியாபாரம் பிரச்சனை இன்றி நடக்கும்.

தனுசு

பொது: யாருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம். உடல் நலம் பாதிக்கப்படலாம். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சமுதாயத்தில் பெரிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

பெண்களுக்கு: உறவினர்கள் பாராமுகமாக இருப்பார்கள். கணவர் பாசமாக இருப்பார். பெரியவர்களின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

மகரம்

பொது: எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பொருளாதாரம் மேம்படும். குடும்பத்துடன் பொழுதை இனிமையாக கழிப்பீர்கள்.

பெண்களுக்கு: குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். குழந்தைகளால் பெருமை அடையக்கூடும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

வேலை பார்ப்போருக்கு: பணி நிமித்த பயணங்கள் சென்று வரக்கூடும். திறம்பட பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் நட்புடன் பழகவும். வியாபாரிகள் முக்கிய முடிவுகள் எடுக்கையில் அவசரம் வேண்டாம்.

கும்பம்

பொது: உங்களின் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அலைபாயும் மனதை கட்டுப்படுத்தவும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உடன் பிறப்புகளுடன் பிரச்சனை ஏற்படலாம்.

பெண்களுக்கு: சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகைள் உங்கள் சொல்படி நடப்பார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு செல்லவும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். யாரிடமும் உங்களின் ரகசியங்களை கூற வேண்டாம். வியாபாரிகள் மகிழும் வண்ணம் லாபம் இருக்கும்.

மீனம்

பொது: நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். சமுதாயத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் இருந்த மனக்கசப்பு மாறும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.

பெண்களுக்கு: குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். கடன் தொல்லை இருக்காது. கணவரிடம் பாசமாக இருப்பீர்கள். உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். வியாபாரிகள் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பீர்கள்.
You cannot reply to topics in this forum