LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

திருநாகேஸ்வரம் கோவிலில் ஜூன் 21 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி விழா

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


17/6/2014, 5:37 pm

கும்பகோணம் : திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் ஜூன் 21 ஆம் தேதி ராகுபெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ராகுதோஷ நிவர்த்தி தலமாக நாகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் தேவாரப்பதிகங்களால் பாடல் பெற்றது.

இத் தலத்தில் ராகுபகவான், நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக வீற்றிருக்கின்றார். இங்கு ராகுவுக்கு பாலாபிஷேகம் நடைபெறும் போது அப்பாலானது நீலநிறமாக மாறும். பாதத்தை அடைந்தவுடன் மீண்டும் வெண்மையாக மாறிவிடும் அற்புத நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த கோவிலில் பக்தர்கள் சுவாமியை வணங்கினால் அவர்களுக்கு ஏற்பட்ட, காலசர்ப்ப தோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம், திருமணதோஷம் ஆகியவை நீங்கும் என நம்புகின்றனர்.

ராகு பகவான், ஜூன் 21 ஆம் தேதி அன்று காலை 11.18 மணிக்கு துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, திருநாகேஸ்வரம் கோவிலில் ஜூன் 21 ஆம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

ராகுபெயர்ச்சியையொட்டி பரிகார ராசிக்காரர்களுக்காக இரண்டு கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நேற்று காலை முதற்கட்ட லட்சார்ச்சனை தொடங்கியது. ஆலய உதவி ஆணையர் ஜெ.பரணீதரன் முன்னிலையில் ராகுபகவான் சன்னதியில் ஆலய முதன்மை அர்ச்சகர் நாகராஜ குருக்கள் தலைமையில் திரளான சிவாச்சாரியார்கள் பங்கேற்ற லட்சார்ச்சனை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், ராகு பெயர்ச்சி அன்று லட்சகணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, இந்த கோவிலுக்கு கும்பகோணம், தஞ்சை, மயிலாடுதுறையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.
You cannot reply to topics in this forum