LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

தமிழ் சோதிட அறிமுகம்.

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 2012-07-31


on 3/8/2012, 4:36 am

சோதிடம் என்பது நான்மறை அங்கங்களாகிய சிஷா, வியாகரணம், சந்தஸ், நிறுத்தம், ஜோதிஷம், கல்பம் என்னும் ஆறனுள் ஒன்றாகும். இதில், சிஷா என்பது அக்ஷரங்களை உச்சரிக்க வேண்டிய முறை; வியாகரணம் என்பது இலக்கணம்; அதாவது சப்தங்களை உபயோகிக்கும் முறை; சந்தஸ் என்பது யாப்பிலக்கணம்; அதாவது கவிபாடும் வழி. நிறுத்தம் என்பது ஆங்காங்கு உபயோகிக்கப்படும் பெயர்களுக்கு ப்ரவிருத்தி நிமித்தம்; அதாவது ஏன் அந்தப் பெயர் வந்தது என்று விசாரிப்பது. கல்பம் என்பது வேத விஹிதமாகிய கர்மாக்களைச் செய்யும் தந்திரம். ஜோதிஷம் என்பது இருவகையாகும். ஒன்று நவக்ரகங்களின் நிலையை அறியும் கணன சாஸ்திரம். இரண்டாவது, அமைந்திருக்கும் கிரஹங்களின் பாகுபாடரிந்து பலன் சொல்வது.

இதில் முதலாவது வைதீக கர்மானுஷ்டானத்துக்கும், இரண்டாவது ஜன்மாந்தரீயமாகிய இருவினைப் போக்கை அறிந்து தீமை வருவதாயின், பரிகாரங்களால் அவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கும் உபயோகமாகிறது.

அநேகர் இந்த சாஸ்த்திரத்தை நம்பாமல் தடுமாற்றமடைகிறார்கள். சாஸ்த்திரம் எந்நாளும் பொய்க்காது. அதைப் பார்ப்பவரிடத்துக் குறை கூறின், அதை ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். "சாமி பொய்யானால் சாணியைப் பார்! சாஸ்த்திரம் பொய்யானால் கிரஹத்தைப் பார்!" என்று ஓர் இடையனே கூறியதாக வதந்தி உண்டு. இதன் கருத்து சாதாரணமாய் வீதியில் கிடக்கும் சாணி, சில நாட்கள் சென்றால் புழுத்துப் போகிறது. ஆனால் வினாயகராகப் பிடித்து அதில் கடவுளை ஆவாஹனம் செய்து பூஜை நடத்த, எத்தனை நாள் வைத்திருந்தாலும் அதில் எந்த ஒரு கெடுதியும் வருவதில்லை. இதனால் கடவுள் உண்டென்று எண்ணத் தோன்றுகிறதல்லவா.

இதன் மேல் வீண் கேள்வி கேட்கிறவர்கள் சுய மரியாதை கோஷ்டியில் சேர்ந்தவராவார். அவரை திருத்த யாராலும் முடியாது. சோதிட சாச்திரத்தினால் முன்னமே கணன ரூபமாயரிந்து, சுத்த பஞ்சாங்கத்தினால் போடுகிற சூர்யசந்திர கிரகுஅனங்கள் குறிப்பிட்ட காலந்தவறாமல் ஏற்படுகின்றன. இது யாவரும் கண்கூடாய் அறிந்த விஷயம்.

கடல் போன்ற விசாலமுள்ள இந்த சோதிட சாஸ்திரத்தில் கொஞ்சம் தவறினாலும் பலாபலன் வெகுதூரம் வித்தியாசப்படும். அதனால் சோதிடம் கூறுவான் உலகத்தாரால் மதிக்கப்படாமல் போய்விடுவான்.

சரியானயந்திரங்களின் சஹாயத்தைக் கொண்டும், முன்னோர்கள் காலம் கண்டு பிடித்து முறையைக் கொண்டும், ஜனன காலத்தை செவ்வனே அறிந்து, ஜாதகம் குறித்து, கிரஹங்களின் நிலையையும் வலு முதலியவற்றையும் ஆராய்ந்து திசாபுத்திகளை உணர்ந்து, பலன் கூறுமிடத்து ஒன்றிரண்டு தவறினாலும் மற்றவை பொருத்தமாகவே இருக்கும் என்பது பெரியோர்களின் கொள்கை.

இந்த சோதிட சாஸ்திரத்தை பல பெரியோர்களின் ஜாதக சிந்தாமணி, ஜாதகலங்காரம், பிருஹஜ்ஜாதகம், புவநேசுவரீயம், சாராவளி, பல தீபிகை, காலாம்ருதம், காலப்பிரகாசிகை, பாராசாரீயம் முதலிய நூல்கள் மூலமாக விரிவாய் கூறினார்கள். இவை எல்லாவற்றையும் நன்காராய்ந்து கற்கும்போது சோதிடத்தின் அருமை புரியும்!
You cannot reply to topics in this forum