LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

கேட்டை நட்சத்திரம் - பொதுப்பலன்கள்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 2012-07-31


on 9/6/2014, 2:52 pm

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்கள்:

இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினெட்டாவது இடத்தை பெறுவது கேட்டை நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்குரியதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் நே, ய, இ, யூ தொடர் எழுத்துக்கள் நே, கை ஆகியவை.

குண அமைப்பு:

கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டினாலும் கட்டும், கேட்டை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும் என்ற பழமொழி உண்டு. இது அவரவர் விதிக்கேற்ப அமைந்த கிரக நிலைகளின் படி அமையும் கேட்டையின் நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் வருங்காலத்தைப் பற்றி முன் கூட்டியே அறியும் திறன் இருக்கும். தான தர்மங்கள் செய்வார்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு நல்ல அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, பொய்மை போன்றவை நிறைய இருக்கும். நீர் நிலைகளில் குளிப்பதில் அதிக ஆர்வமும், நொறுக்கு தீனி தின்பதில் அதிக விருப்பமும் கொண்டவர்கள். ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் விவேகியாகவும் மாறுவார்கள். செய்த நன்றியை மறவாதவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல் சமானத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். நல்ல நுண்ணுறிவும் பேச்சு திறனும், மற்றவர்களின் மன நிலையை அறிந்து பேசும் திறமை சாலியாகவும், எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பவர்களாகவும், புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமில்லை. பெண்ணாக இருந்தால் திருமணத்திற்கு பின் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்பது சாஸ்திர விதி.

குடும்பம்:

கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர கூடிய யோகம் கொண்டவர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நற்குணங்கள் நிறைய இருக்கும். தர்மம் தலை காக்கும் என்ற நம்பிக்கையுடையவர்களாதலால் நிறைய தான தர்மங்களை செய்வார்கள். முன் கோபியாக இருந்தாலும் மலர்ந்த முகமும் இனிமையான புன்னகையும் கொண்டவர்கள். மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறையும் உடன் பிறப்புகளிடையே நிறைய பாசமும் வைத்திருப்பார்கள். இவர்களுடைய இனம், உற்றார் உறவினர்களை பற்றி பெருமையாக பேசி கொண்டிருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். நிறைய பேருக்கு காதல் திருமணமே நடைபெறும். உயர்ந்த இடத்தில் மட்டுமே சிநேகிதம் வைத்து கொள்வார்கள். இருப்பதை வைத்து திருப்தி அடைவார்கள்.

தொழில்:

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பலர் கதாசிரியர்களாகவும், பத்திரிகை நிருபர்களாகவும், மனோ தத்துவ நிபுணர்களாகவும், நடிகர் நடிகைகளாகவும், கட்டிட காண்டிராக்டர்களாகவும், அழகுகலை நிபுணர்களாகவும் பிரதிபலிப்பார்கள். புகைப்படம் எடுக்கும் துறை கம்பியூட்டர் துறை, எல்.ஐ.சி, அரசு வங்கி , தனியார் நிதி நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கடலில் மூழ்கி முத்தெடுப்பதிலும் ஆர்வம் இருக்கும். பல இடங்களில் சிறந்த ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். 22 வயது வரை கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் தன் கையே தனக்குதவி என சுய உழைப்பில் செல்வம் சேர்ப்பார்கள். தனக்கென ஒரு புதிய ராஜாங்கத்தை அமைத்து கொள்வார்கள். 46 வயது முதல் 56 வயது வரை ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகம் நிறைய உண்டாகும்.

நோய்கள்:

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே நல்ல ஆரோக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றாலும் தோள் விலா எலும்புகளில் வலிமையும், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் உண்டாகும்.

திசை பலன்கள்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் புதன் திசையின் மொத்த காலங்கள் 17 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். புதன் பலம் பெற்று சுபர் சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல அறிவாற்றல் கல்வியில் மேன்மை, பேச்சாற்றலால் மற்றவர்களை கவரும் அமைப்பு கொடுக்கும். புதன் பலமிருந்திருந்தால் அடிக்கடி உடல் நல பாதிப்புகள், ஞாபக சக்தி குறைவு கல்வியில் மந்த நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கு குறையும்.

இரண்டாவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையை கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிப்படைந்து ஞாபக சக்தி குறையும்.

மூன்றாவதாக வரும் சுக்கிர திசை 20 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். இல்லையெனில் மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படும்.

நான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும் ஐந்தாவதாக வரும் சந்திர திசை 10 வருடமும் நடைபெறும். இத்திசைகளின் காலங்களிலும் கிரகங்கள் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும். 6வதாக வரும் ராகு திசை மாரக திசையாக கூறப்படுகிறது.

ஸ்தல மரம்:

கேட்டை நட்சத்திர காரர்களுக்கு உரிய மரம் பாலுள்ள பராய் மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை கும்ப ராசி உதயமாகி 1----&3/4 நாழிகை அளவில் இரவு 11 முதல் 12 மணி வரை வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்:

ஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்களை பேசி தீர்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்:

வழுவூர்:

மயிலாடு துறைக்கு தெற்கே 8 கி.மீ தொலைவிலுள்ள மூகமோசனம், ஞானாம்ருத தீர்தம் இரண்டும் தனி சிறப்பு கொண்டவை. ஈசனர் கீர்த்தி வாசன் என்ற திருநாமத்தை கொண்டுள்ளார். கஜ சம்ஹார மூர்த்தி தரிசனத்தை இங்கு மட்டுமே காண முடியும். அமாவாசை நாளில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் வில்லேந்திய சனிஸ்வரனையும் இங்கு காணலாம்

பிச்சாண்டார் கோயில்:

திருச்சிக்கு வடக்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. பிச்சாண்டார் மேற்கு முகமாகவும், புருஷோத்தம பெருமாள் கிழக்கு முகமாகவும், பிரம்மா வடக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். சரஸ்வதி தேவிக்கும் இங்கே தனி ஸ்தலம் உண்டு

செய்ய வேண்டிய மந்திரம்:

ஓம் பூவராஹாய வித்மஹே
வஜ்ர ருபாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்

கேட்டை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.
You cannot reply to topics in this forum