LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

மேஷ ராசி - விளம்பி வருடம்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 2012-07-31


on 20/4/2018, 5:56 pm

அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் உள்ள மேஷ ராசிக்காரர்கள் அனைவருக்கும் இந்த பலன் பொருந்தும். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காமல் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பிறந்திருக்கிற விளம்பி தமிழ்ப் புத்தாண்டு துன்பங்கள் எதையும் தராமல் இன்பங்களை மட்டுமே தருகிற மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையும்.

சென்ற வருட சனிப்பெயர்சு்சியால் அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்ததால், வேலையில் சங்கடங்கள், வேலை இழப்பு, தற்காலிக பணிநீக்கம், மனதிற்கு பிடித்தமான வேலை கிடைக்காதவர்கள் அனைவரும் விளம்பி வருட ஆரம்பத்தில் இருந்தே வேலை சம்பந்தப்பட்ட குறைகள் நீங்கி, மனமகிழ்ச்சியோடு, தங்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை நோக்கி நடை போடுவீர்கள்.

சிலருக்கு வாழ்க்கை குறித்து இருந்து வந்த நம்பிக்கையின்மை, மன அழுத்தம், கணவர் - மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேற்றுமை, பிரிவு, வழக்கு, கடன் தொல்லைகள், ஆரோக்கிய குறைவு, தொழில் நஷ்டம், பிறரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் போன்றவைகளும் நீங்கி, வாழ்க்கை இனி நல்ல வழியில் செல்லத் துவங்கும். இதை வாழ்வின் ஒரு புதிய தொடக்கமாகக் கருதி அடியெடுத்து வையுங்கள். நல்லதே நடக்கும்.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்படும். பணவரவு தாராளமாக இருந்து கொண்டே இருக்கும். தொட்டது துலங்கும். எடுத்த காரியங்களை ஜெயமாக முடிப்பீர்கள். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் பெருகும்.
ராஜகிரகங்கள் என்று சொல்லப்படும் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் தற்போது மேஷ ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால், கடுமையான பலன்களைத் தந்து வந்த அஷ்டமச்சனி சமீபத்தில் விலகியிருக்கிறது. இனிமேல் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கம் காட்டத் தேவையில்லை. முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போடத் தயார் ஆகுங்கள்.

பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு பலன்கள் எல்லாமே இரட்டிப்பாக கிடைக்கும். அதிலும் சிலர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழின் உச்சிக்கு செல்வார்கள். பொது வாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும் ஆண்டு இது. கடந்த காலங்களில் நீங்கள் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பல்வேறு மனக்கஷ்டங்களையும் தடைகளையும் சந்தித்திருப்பீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.

வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் கைகூடாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன்கள் அமையும். நீண்டகாலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இந்த ஆண்டோடு நீங்கிவிடும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். இதுவரை குழந்தை பாக்கியம் வாய்க்காமல் இருந்து வந்தவர்களுக்கு புத்திர காரகனாகிய குருபகவான் ஏழில் இருப்பதால் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள் வீட்டில் பேரக்குழந்தையின் மழலைச் சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது. கொஞ்சி விளையாட, பொம்மைகள் வாங்க தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டிய காலமாக இந்த ஆண்டு நிச்சயம் இருக்கும்.

நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையும். இனி வாய்ப்புகளைத் தேடி நீங்கள் போகத் தேவையில்லை. வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும். வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அல்லது அதே அதிகாரி மனமாற்றத்துடன் உங்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து நஷ்டத்தை சந்தித்தவர்களுக்கு இந்த ஆண்டு லாப முகத்தோடு ஆரம்பிக்கும்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம் இதுதான். இப்படியொரு யோக காலத்தை கை நழுவ விட்டுவிடாதீர்கள். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மெத்தனப்போக்கும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், தொழில் கூட்டாளிகளும் உதவிகரமாக இருப்பார்கள்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். தர்ம காரியங்கள் செய்து அடுத்தவர்களையும் மகிழ்விப்பீர்கள். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் பலிக்கும். தொழிலை விரிவு செய்ய பல்வேறு வாய்ப்புகள் தேடி வரும்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது நிறைவுற்ற முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களின் கல்வி வெற்றியில் முடியும். நல்ல மதிப்பெண்கள் பெற்று அடுத்த கட்ட முயற்சியில் ஈடுபட்டு ஜொலிப்பீர்கள். சிலருக்கு நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவதற்கான நேரமும் வாய்ப்பும் தானாகவே அமையும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த புனித யாத்திரை இப்போது செல்வதற்கான நேரம் கைகூடி வரும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெறலாம்.
மொத்தத்தில் மேஷ ராசிக்கு சிறப்புகள் மட்டுமே உள்ள புத்தாண்டு இது. அதனால் இதை வாழ்வின் தொடக்கம் போல எண்ணி, முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போடத் தயார் ஆகுங்கள்.

Message reputation : 100% (1 vote)
Astrologer••• 2
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 2012-07-31


on 20/4/2018, 6:00 pm

ரிஷப ராசி - விளம்பி வருடம்

(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு இநத விளம்பி வருடம் என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிதாகப் பிறக்கும் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு வாழ்க்கையைப் புரிய வைக்கும் ஆண்டாக மாறும். பல்வேறு மாற்றங்களையும் படிப்பினைகளையும் கற்றுத் தருவதாக இருக்கும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு தற்போது இருக்கும் நிலையில் இருந்து வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத பெரிய மாற்றங்கள் கூட நிகழலாம்.

இளையவர்களுக்கு வரப்போகும் மாற்றங்களினால் உங்களின் எதிர்காலத்திற்கான நன்மைகள் மட்டும்தான் இருக்கும் என்பதால் இளம்வயதினர் இந்த தமிழ்ப் புத்தாண்டில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நடுத்தர வயதினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பின்னடைவுகள் ஏற்படும் என்பதால் அனைத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் பங்குதாரர்களிடமும் புதிய கூட்டாளிகளைச் சேர்ப்பதிலும் கவனமாக இருங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். விளம்பி வருடத்தின் சிறப்பு பலனாக தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத் தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். அவர்களுக்கு வேலையை ஒதுக்கிக் கொடுத்தாலும் எல்லா விஷயத்திலும் உங்களுடைய ஒரு கண்ணையும் வைத்திருப்பது நல்லது.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான பயண அலைச்சல்கள் உண்டாகும். வருடம் கடன் கொடுக்கல், வாங்கல் செய்யாமல் இருப்பது நல்லது. சொந்த வீட்டில் உள்ளவர்களைத் தவிர யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக எப்போதையும்விட கடுமையாக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதை முடிந்தவரை தவிர்க்க பாருங்கள். கையிலிருப்பதை வைத்து சமாளிக்கக் கற்றுக் கொள்ளங்கள். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கோ வருமானம் வரும் வகையில்தான் செலவாகும். ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஓரளவு நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறை ரீதியான தேவையில்லாத மாற்றங்கள் உண்டாகும். வீடு அல்லது தொழில் மாற்றம் ஏற்படும்.

அஷ்டம சனியின் ஆதிக்கத்தால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். வெளி மாநிலங்களுக்குச் செல்வீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் லாபங்கள் ஓரளவு இருக்கும். ஆனாலும் அதை தவிர்க்க இயலாது. இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். சிலருக்கு மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகள் இருக்கும். பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும். பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும் சிக்கல்களும் சேர்ந்தே வரும். அதில் மாட்டிக் கொள்ளாமல் இருங்கள். நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே உஷாராக இருங்கள்.
எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது வேண்டாம். அது சரியாக வராது. இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கும்படி சந்தர்ப்பம் கூட உண்டாகும். அதனால் சொத்து விற்பது வாங்குவது போன்ற விஷயத்தில் கொஞ்சம் நிதானமாகவே இருங்கள்.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் ஆகிய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடல் நலத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் நீதிமன்றத்துக்கும் காவல்துறைக்கும் அலைய வேண்டிய சூழல் உருவாகும். எதிலும் கவனம் தேவை. ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அதை உடனே முடித்தாக வேண்டும் என்று அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம். குடும்பப் பிரச்னைகளுக்காகவும் சொத்து பிரச்னைக்காகவும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது.

பெண்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பளஉயர்வு தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமூகமான சூழ்நிலை உருவாகும். உங்களுடைய திறமை உங்களுடைய மேலதிகாரிக்கும் முதலாளிக்கும் முழுமையாகத் தெரிய வரும். தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பேரை கெடுத்துக் கொள்வீர்கள். ஜாமீன் போடுவது மற்றும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் நிமிடத்தில் கெட்டுப்போய்விடும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு கவனமாக இருங்கள். ரிஷபத்தினர் வேலை, தொழில் விஷயங்களில் நிதானமாகவும் பொறுமையுடனும் இருப்பதன் மூலம் சாதகமற்ற பலன்களைக் கூட உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வருடமாக இது அமையும்.

Message reputation : 100% (1 vote)
Astrologer••• 3
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 2012-07-31


on 20/4/2018, 6:05 pm

மிதுன ராசி - விளம்பி வருடம்

(மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு எப்படி அமையும். இந்த வருடம் முழுக்க என்ன மாதிரியான பலன்களை அடைவார்கள் என்று பார்க்கலாம். பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிரக நிலைகள் கெடுபலன் எதுவும் தராத நிலையில் விளம்பி ஆண்டு உங்களுக்கு துன்பங்கள் எதுவும் தராமல் நன்மைகளை மட்டுமே தரும் ஆண்டாக அமையும்.

இதுவரை உங்களுக்கு என்னவெலல்லாம் கிடைக்காமல் இருந்ததோ அவை ஒவ்வொன்றாக இந்த ஆண்டு கிடைக்கத் துவங்கும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த தமிழ்ப் புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் எல்லா விஷயங்களிலும் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம் உஙக்ள் பக்கம் இருக்கும். கிரக நிலைகள் மிதுன ராசி இளைய பருவத்தினருக்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக உங்களின் வாழ்க்கை அனைத்து விதமான முன்னேற்றத்தை நோக்கிச் செல்வீர்கள். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இனி நீங்கி, உங்களுக்கான புதிய பாதை திறக்கும். இந்த விளம்பி வருடத்தில் உங்களுடைய மன தைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப் போடும் வேலையே இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த எல்லா விஷயங்களிலும் நீங்களே தலைகீழ் மாற்றங்களையும் உங்களுடைய துணிச்சலையும் கண்டு வியப்படைவீர்கள். அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வலிய வந்து உதவி செய்வார்கள்.

இளைஞர்களுக்கு படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வந்து சேரும். சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். பொருளாதார உண்டாகும் ஆண்டாக இந்த விளம்பி வருடம் திகழும். வியாபாரிகளுக்கு அற்புதமான உயர்வைத் காலகட்டம் இது. புதிய தொழில் தொடங்கவோ அல்லது கிளைகளை விரிவுபடுத்தவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ மிகச் சரியான நேரம் இஇதுதான். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளிவிட்டு சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பிக்கலாம். அதில் வெற்றி கொடியும் நாட்டலாம். தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி நிரந்தர வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும்.

பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையைத் தர கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்து கமிஷன் போன்ற பிற வகைகளிலும் மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.அில் அதிர்ஷடம் உங்கள் பக்கமே இருக்கும்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த சுப காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலிப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்தியவர்களுக்கு நல்ல முறையில் குழந்தை பேறு உண்டாகும். ராகு நன்மையை மட்டும் செய்யும் இரண்டாம் வீட்டில் இருப்பதால் சிலருக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மறைமுகமான வகைகளில் பண லாபம் இருக்கும். இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை உங்களால் காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை கொடுத்துவிடுவீர்கள். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக்கொடுத்து இருந்தால் அதையும் நிறைவேற்றுவீர்கள்.

கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்துப் போவது அவசியம். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் குடும்ப விஷயத்தில் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எதிலும் அவசரப்பட வேண்டாம். சின்ன சின்ன சண்டைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்துக்கள் வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்க ஆரம்பிப்பீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சிஉண்டாகும். ஒன்றாகக் கூடி மகிழ்வீர்கள். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனை வாங்குவதோ செய்ய நேரம் கைகூடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகள் நடக்கும்.

பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும். வழக்கு, நீதிமன்றம், போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை உடல்நிலை சரி இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் ஆண்டாகும். பெண்களின் மதிப்புகள் உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்களும் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேல் அதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும்.

கமிஷன் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் 'லம்ப்'பாக கிடைக்கும். அதை சுப காரியங்களுக்கோ தொழில் விருத்திக்கோ பயன்படுத்தினால் அந்த பணம் பெருகும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச்சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது ஓரளவிற்குக் கை கொடுக்கும். அதற்காக பேராசைப்பட்டு தவறான சில முடிவுகளை எடுக்காதீர்கள். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் பேங்கில் பணம் டெபொசிட் செய்யலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த விளம்பி வருடம் பெரும் திருப்பு முனையான தமிழ்ப் புத்தாண்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.

Message reputation : 100% (1 vote)
Astrologer••• 4
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 2012-07-31


on 20/4/2018, 6:07 pm

கடக ராசி - விளம்பி வருடம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த கடக ராசிக்காரர்களுக்கு இந்த விளம்பி வருட தமிழ் பத்தாண்டு எப்படி தொடங்கும், என்ன மாதிரியான பலன்களைத் தரும் என்று பார்க்கலாம். புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடத்தில் கடக ராசிக்கு சிறப்பான அம்சம் என்னவென்று பார்த்தோமேயானால் ராசிக்கு ஆறாமிடத்தில் இரு பெரும் பாவக் கிரகங்களான செவ்வாயும், சனியும் ஒன்று கூடி நிலை கொண்டிருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தரும் அமைப்பு ஆகும். எனவே இப்போது தொடங்கியிருக்கிற விளம்பி தமிழ்ப் புத்தாண்டை கடக ராசிக்காரர்களுக்கு நன்மையானதாகவே அமையும்.

பாவ கிரகங்கள் மூன்று, ஆறு, பதினொன்றில் கோட்சார ரீதியில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று ஜோதிட மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி புத்தாண்டின் ஆரம்பத்தில் ராசிக்கு ஆறாமிடத்தில் செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதும், வருடம் முழுவதும் சனி பகவான் ஆறில் இருக்கப் போவதும் கடகத்திற்கு நல்ல பலன்களைத் தரும். அதேபோல புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் சாதகமற்ற பலன்களை தரும் நான்காமிடத்தில் இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சிக்கு பிறகு குருபகவான் நன்மைகளை அள்ளி வழங்குகிற ஸ்தானமான ஐந்தாம் ஸ்தானத்திற்கு இடம் பெயர்வதால் குருவாலும் இனிமேல் கடகத்திற்கு நன்மைகளே உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்கும். தொழிலை விரிவுபடுத்தும் உங்களின் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க மிகவும் நல்ல நேரம் இது. கூட்டாளிகளைத் தேர்வு செய்வதில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் நிசசயம் நல்ல லாபம் உண்டாகும்.

காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை பணி துறையினருக்கும் இந்த வருடம் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும். பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை மாற்றம் வரலாம். இதற்காக சோர்வடையாதீர்கள். அதற்கான பலன் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.
அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு 'இதர வருமானங்கள்' சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடுகள் தீரும். குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

நவம்பருக்குப் பிறகு இளைய பருவத்தினருக்கு திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். பொருளாதார நிலை மேம்பாடடையும். சரளமான பணவரவு இருந்து கொண்டே இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல தொடர்ச்சியான வருமானம் வரும்.

பிற இன மொழி மதக்காரர்களின் நேசத்தைப் பெறுவீர்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். தூரத்தில் பணியிடம் அமையும். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகவே உங்களக்கு அமையும். எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். மந்தமான நிலைமை மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் பெரும் உதவியாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் தேடிக்கொள்வீர்கள். புனித யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். வயதானவர்கள் காசி கயா போன்ற புனிதப்பயணம் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளிதேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை முதலீட்டில் ஓரளவு லாபம் உண்டாகும். இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாகவே முடியும். இனிமேல் வராது என்று நீங்கள் நினைத்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரய செலவுகள் வரக்கூடும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் அனைத்தும் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். ஆனால் அதனால்மற்றவர்களுக்கு மனவருத்தம் ஏதும் இருக்காது. மகிழ்ச்சியாகவு வேறு வீட்டுக்கு மாறுவீர்கள்.

பெண்களுக்கு நகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலி பாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். கடக ராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத புது வருடம் மகிழ்ச்சிகரமாகவே அமையும்.

Message reputation : 100% (1 vote)
••• 5

Sponsored content

Sponsored content


You cannot reply to topics in this forum