LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

சோதிட சூட்சுமங்கள் - 2

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 2012-07-31


on 3/9/2012, 11:17 am

ஜோதிட சூட்சுமம் 16

மிதுனம் & கன்னி ஒரு உபய லக்னம், இதன் அதிபதி புதன். புதன் பகவானின் முதல் எதிரி குருபகவனே. புதன் அதீத ஆர்வமும், இடைவிடாத வேகமும் மற்றும் ஐம்புலன்களால் பெற்ற புத்தியையும் கொடுப்பவர். குருவின் செயல்கள் புதனின் செயல்களுக்கு எதிரானது. பக்குவம், போதனை மற்றும் பகுத்தறிவு (அ) நுண்ணறிவு இவை குருவின் செயல்கள். புதன் பொருள் தேடி செல்லும் புத்தியை வழங்கினால், குரு அருள் தேடும் வழியை போதிப்பார். இவ்விரண்டும் எதிர்மறையனதே. அதனாலே புதன் மீனத்தில் நீச்சம். மிதுன லக்னத்தின் கேந்திர ஸ்தானத்தில் புதன் ஒன்று மற்றும் நான்காம் ஸ்தான அதிபதியாகிறார். ஆதாவது, புதன் காரகத்தன்மை தன் தாய் வீட்டான, கன்னியில் உச்சம் பெறுகிறது. இதுவே லக்ன நேர் எதிர்வீடான தனுசு ராசியில் பகை. இருவரும் சுபரே ஆனால், புதன் சார்பு தன்மை உள்ள கிரகம், இதனாலே நண்பர்களின் காரகத்துவ கிரகமாய் புதன் இருக்கிறார். குரு முழுசுபர். சார்பு தன்மையை அகற்றி பக்குவம் பெற களத்திர ஸ்தான அதிபதியாகவும், ஜீவன ஸ்தான அதிபதியாகவும் வந்து, திருமணத்திற்கு பின்னும், தொழில் ஆரம்பித்த பின்னும், லக்ன அதிபதி புதனுக்கு பல கசப்பான அனுபவம் தந்து குரு பக்குவபடுதுகிறார்.

ஜோதிட சூட்சுமம் 17

ஆதிபத்தியம் என்பதன் அர்த்தம், உரிமை என்பதே பொருள். இதற்கு சீரிய உதாரணம், ஏகாதிபத்தியம் என்னும் வார்த்தையே. ஏகம் = தனித்த (அ) ஒன்று, ஆதிபத்தியம் = உரிமை. இட்ஸ் கால்ட் ஆடொக்ர்யாடிக் பிஹேவியர். ஒவ்வொரு பாவமும், நட்சத்திர பாதம் வழியே தன் பாவத்தின் பலன்களை வெளிபடுத்தும் என்பது சூட்சுமம். அதனாலேயே நட்சத்திர அதிபதிகள் போல், நட்சத்திர பாத அதிபதிகள் என்று நாம் முன்னோர்கள் பிரித்தனர். எனவே அந்த சாரம் வழியே வெளிப்படும் பாவபலன், அந்த சாரம் மீது அமரும் கிரகத்தின் காரகத்துவம் பொறுத்தும் மற்றும் சாரநாதன் வலிமை பொருத்தும் பலன்கள் நடைபெறும். ஆதிபத்தியம் என்பது உரிமை மட்டுமே, அது கிரகத்தின் செயல்கள் இல்லை. ஒரு பாவத்தின் செயல்கள்,.ஒருவன் நல்ல கிரகம் (குரு) தீய ஆதிபத்தியம் பெற்று, பலமானால் காரக,பலம் அதிகம் பெற்றால். தீய ஆதிபத்தியம் செய்யும் எண்ணமோ அல்லது செயல் செய்வதற்கு முடியாது. இங்கே காரக பலம் என்பது சுபதன்மை அதிகரித்தல் என்பதே பொருள். ஒரு பாவத்தின் பலன்கள், அந்த பாவத்தில் உள்ள சாரத்தில் அமரும் கிரக காரகத்துவ பண்புகள் மூலம
வெளிப்படும் என்பதே என் இறுதி முடிவு. இதில் சாரநாதன் பலமும் முக்கியம்.

குறிப்பு: வேத ஜோதிடப்படி, பாவங்கள் லக்னங்கள் பொறுத்தே அமைய பெறுவதால், லக்ன அதிபதியின் பலம் பொறுத்தே அனைத்து பாவ பலன்களும், இருக்கும்.

ஜோதிட சூட்சுமம் 18

ஒரு கிரகம் ஏறி நிற்கும் சாரநாதன், கிரகத்தின் நண்பராக இருந்து பலம் பெற்று, அக்கிரகம் இருக்கும் வீட்டுக்கு கேந்திர கோணம் பெற்று இருக்க, அந்த கிரகம் இருக்கும் வீட்டின் ஆதிபத்திய பலன் முழுதும் கிடைக்கும்.

ஜோதிட சூட்சுமம் 19

கிரகங்கள் தொடர்பு பெரும் மனித உடல் அம்சங்கள்
சூரியன் - ஆத்மா, உயிர், வலது கண், இருதயம்
சந்திரன் - மனம், மார்பகம், சிறுநீரகம், இடது கண், முகம்
செவ்வாய்- ரத்தம், எலும்பு மஜ்ஜை, சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள்
புதன் - தண்டுவடம், தொண்டை, தோள்பட்டை மற்றும் நரம்புகள்
குரு - மூளை, கருமுட்டை, தொடை, பாதம், மூக்கு, நாசி
சுக்கிரன் - பால் சுரப்பிகள், ஆண் விந்து நீர், சுரோனிதம் (பெண் பால் சுரப்பி நீர்)
சனி - பிருஷ்டம், மூட்டு, முழங்கால், ஜீரண உறுப்பு, தாடை
ராகு - குடல்,மலக்குடல்,காது,தலை
கேது - ஆசன துளை, நகம்,முடி,மர்ம உறுப்பு

ஜோதிட சூட்சுமம் 20

ஜோதிடத்தில் நோய் அறியும் சூட்சுமம்:

ஜோதிடத்தில் 6 மற்றும் 8 பாவங்கள் நோய் தரும் பாவங்கள் என கூறப்பட்டுள்ளது. இதில் 6 பாவம் தவறான பழக்க வழக்கங்களால் வரும் நோய் ஆகும். 8 பாவம் பரம்பரை மற்றும் பூர்வ ஜென்ம பாவத்தால் வரும் நோய் என அறிந்து கொள்ளலாம்.

ஆறாம் பாவம் மூலம் நோய் அறிதல்:

ஆறாம் பாவம் லக்ன அதிபதியை விட பலம் பெற்று, கேந்திர ஸ்தானங்களில் அமர, அக்கிரகம் அமர்ந்த கேந்திர அதிபதி பலம் குன்றியவராக அல்லது பகைவராக இருப்பின், 6 பாவ அதிபதி பெறும் சாரம் பொறுத்து நோய் ஏற்படும். சுபர் பார்வை, 6 பாவ அதிபதி மேல் பட, தெய்வ அருளாலும், வைத்தியத்தாலும், 6 பாவத்தால் ஏற்படும் நோய் குணமடையும். மேலும் ஆறாம் அதிபதி நோய் நிவர்த்தி காண, 6 ஆம் வீட்டின் 7 வீடான 12 பாவ பலத்தை அறிதல் வேண்டும். 12 பாவத்தில் அமரும் லக்ன சுப கிரகமும், 12 வீட்டின் அதிபதியின் பலம் பொருத்தும் அவர் பெறும் சாரம் பொருத்தும் நோய் குணமடையும் போக்கை கண்டறியலாம்.

எட்டாம் பாவத்தின் மூலம் நோய் அறிதல்:

எட்டாம் பாவம் லக்ன அதிபதியை விட பலம் பெற்று, கேந்திர ஸ்தானங்களில் அமர, அக்கிரகம் அமர்ந்த கேந்திர அதிபதி பலம் குன்றியவராக அல்லது பகைவராக இருப்பின், 8 பாவ அதிபதி பெறும் சாரம் பொறுத்து நோய் ஏற்படும். சுபர் பார்வை, 8 பாவ அதிபதி மேல் பட, தெய்வ அருளால் நோய் குணமாகும். 8 பாவத்தால் ஏற்படும் நோய் எளிதில் குணமடைவதில்லை. எனவே எட்டாம் அதிபதி நோய் நிவர்த்தி காண, 8 ம் வீட்டின் 7 வீடான 2 பாவ பலத்தை அறிதல் வேண்டும். மேலும் 9 இடமான தெய்வ பக்தி ஸ்தானத்தின் பலத்தையும் அறிதல் வேண்டும். 2 பாவத்தில் அமரும் லக்ன சுப கிரகமும், 2 வீட்டின் அதிபதியின் பலம் பொருத்தும் அவர் பெறும் சாரம் பொருத்தும் நோய் குணமடையும் போக்கை கண்டறியலாம். ஆறு மற்றும் எட்டாம் அதிபதி ஆட்சி உச்சம் பெறுதல் சுபமில்லை. இவர்கள் பெறும் சாரம் பொறுத்து ஏற்படும் நோய் என்ன என்பதையும், அவர்கள் அமர்ந்த பாவம் பொறுத்து எந்த இடங்களில் நோய் ஏற்படும் என்பதை அறியலாம்.
இதில் லக்ன நண்பராக 6 அல்லது 8 அதிபதிகள் வரும் போது, நோய்கள் ஏற்பட்டாலும் விரைவில் குணமடையும். 6 & 8 வீட்டின் அதிபதி குருவாக வரும் போது, ஆவார் முழுமையாக பலம் இழக்கும் போது மட்டுமே நோய் ஏற்படுகிறது.

பாதாகாதிபதிகள் மூலம் வரும் உடல் கோளாறுகள்:

இதில் பாதாகாதிபதிகள் பலம் பெற்று, கேந்திரத்தில் அமர, கண் திருஷ்டியினாலும், பில்லி சூனியம் மற்றும் செய்வினை போன்ற கோளாறுகளால் ஏற்படும் உடல் உபாதைகளை குறிக்கிறது. சர லக்னத்துக்கு (மேஷம், கடகம், துலாம், மகரம்) 11 இடமும், ஸ்திர லக்னத்துக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சக்கம், கும்பம்) 9 இடமும், உபய லக்னத்துக்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) 7 இட அதிபதிகள் பாதகாதிபதிகள் ஆவார்கள். இவர்கள் ஆட்சி உச்சம் பெற்று பலம் பெற்று, லக்னாதிபதி மற்றும் திரிகோன அதிபதிகள் பல இழக்க, மேற்சொன்ன உபாதைகள் ஏற்படும்.

பொதுவாக கவனிக்க வேண்டியவை:

சூரியன் ஆத்மா காரகன் என்பதால் லக்ன அதிபதிக்கு அடுத்து சூரியனையும், மனத்தை குறிக்கும் கிரகமான சந்திரன் நிலையும் ஆராய்ந்து பின் நோய் அறிதல் வேண்டும். இதில் குறிப்பாக, செவ்வாய் ரத்தத்தை குறிப்பதால், தவறான பழக்க வழக்கங்களால் ஏற்படும் நோய் குறிப்பார். சனி கர்மக்காரன் என்பதால் பரம்பரை மற்றும் பூர்வ ஜென்ம பாவங்களால் ஏற்படும் நோயினை குறிப்பார். எனவே ஆறாம் பாவம் ஆராயும் போது பொதுவாக செவ்வாய் நிலையையும், 8 பாவம் ஆராயும் போது, சனி நிலையையும் கவனிக்க வேண்டும்.

நோய் நீக்க மருத்துவம் மற்றும் மருந்து உட்கொள்ளும் நட்சத்திரங்கள்.

அஸ்வினி,சதயம் –அனைத்து வியாதிகளும் நீங்க.
பூசம்- பரம்பரை நோய்கள்,பூர்வ ஜென்ம பாவத்தால் வரும் நோய்கள் நீங்க. மகம்-பித்ரு சாபத்தால் வரும் நோய்கள் நீங்க.

ஜோதிட சூட்சமம் 21:

கேந்திரம் என்றால் ஒரு பாவத்தின் மையப்புள்ளிகள் என்று பெயர்கள். ஒவ்வொரு தனித்தனி பாவத்திற்க்கும் தனித்தனி கேந்திரங்கள் உள்ளது. இதில் லக்ன கேந்திரமே முதன்மையானது. ஜோதிடத்தில் கேந்திரங்கள் என்பவை இரண்டாக பிரிக்கப்படும். ஒன்று அக கேந்திரபுள்ளிகள் மற்றும் புற கேந்திர புள்ளிகள். எடுத்துக்காட்டாக, லக்ன கேந்திரங்களில் 1, 4 என்பவை ஒருவனின் அகம் சார்ந்த விஷயங்கள் குறிக்கும் பாவங்கள். ஒன்று என்பது லக்னம் இது தோற்றம் மற்றும் மூளையை குறிக்கிறது, நான்கு என்பது தாய், சுய ஓழுக்கம், இருதயம் மற்றும் சுகத்தை குறிப்பது. எனவே இவை அக கேந்திர புள்ளிகள். புற கேந்திரப்புள்ளிகள் 7, 10. இதில் 7 என்பது புறத்தில் இருந்து வரும் மனைவியையும் மற்றும் தொழில் கூட்டாளிகளையும் குறிக்கிறது. இதில் பத்து என்பது ஜீவனத்திற்கு எனவே இதுவும் புற விஷயங்களை குறிக்கிறது. கேந்திரங்களில் எப்பவுமே, அதன் எதிர் பாவங்கள் சம வலிமை பெற்றது. ஒன்றை ஒன்று சமன்படுத்தும் தராசு போன்ற அமைப்பாகும். மேலும் ஒவ்வொரு எதிர் பாவமும் ஒன்றை ஒன்று சார்ந்ததாகும். எடுத்துக்காட்டாக, ஒன்றாம் இடம் என்ற லக்னம் (ஜாதகத்தை) எழாம் இடமென்னும் மனைவியை சார்ந்திருப்பவர். நான்காம் இடமென்னும் உடல் ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் (4 இடம்) பொருத்தே அல்லது சார்ந்துதான் தொழில் மற்றும் ஜீவனம் வலிமை பெறும்.

ஜோதிட சூட்சுமம் 22:

லக்ன கேந்திரங்களை போல் மேலும் இரு முக்கிய கட்டமைப்பு ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. அவை கேந்திரங்களை போன்றே தோற்றம் தருகின்றன. அவையாவன:

1. பண பர ஸ்தானங்கள் (2, 5, 8, 11)
2. ஆபோக்லீமம் (3, 6 , 9 , 12)

ஜாதகரின் பொருளாதார முன்னேறத்தை குறிப்பன இந்த பண பர ஸ்தானங்கள். இவை லக்ன கேந்திர பாவங்களின் இரண்டாம் வீடுகளாக வருகின்றன. ஆதாவது லக்ன கேந்திர புள்ளிகளின் தன ஸ்தானங்கள். இவை.

லக்ன கேந்திர புள்ளிகளின் தன வரவுகள், இந்த பண பர ஸ்தானத்தை பொறுத்தே அமைகிறது. லக்ன அக புள்ளிகளான 1 மற்றும் 4 இவற்றின் தன ஸ்தானங்கள், 2 மற்றும் 5 என்பவை அக பண பர ஸ்தானங்கள், ஓருவனின் வாக்கு அவனின் மூளை மற்றும் யோசிக்கும் திறன் பொறுத்தே அமைகிறது. என்வே இதன் இரண்டாம் இடம் மூளை மூலதனத்தால் பெரும் செல்வதை காட்டுகிறது. அடுத்து நான்காம் வீட்டின் இரண்டாம் வீடு ஐந்தாம் வீடு (5), இது ஒருவன் ஒழுக்கத்தால், படிப்பால் மற்றும் தாய்வீட்டின் உதவியுடன் பெறும் மூலதனத்தை காட்டுகிறது. மேலும் இது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால், முன் ஜெனம பலன்படி நாம் பெறும் குழந்தை செல்வம் கூட தன வரவில் எடுத்து கொள்ளபடுகிறது. இந்த 2 மற்றும் 5 பாவங்களும், அகம் சார்ந்த பாவங்கள். ஆதாவது ஓருவனின் சுய திறமையால் மற்றும் உழைப்பால் பெறும் பண வரவை கூறும் பாவங்கள் இவை. தான் வாக்கிங் மூலம் பெறும் பண வரவை இரண்டாம் இடமும், தன் ஒழுக்கத்தால் மற்றும் உடல் ஆரோக்கியதால் பெற்ற தனம் 5 இடம்.

மேலும் 8 மற்றும் 11 இடம், புறம் சார்ந்த பண வரவுகளை குறிக்கும். ஒருவன் பிறரின் உழைப்பாலும் மற்றும் மறைமுகமாகவும் பெறும் தனம். 8 இடம் மறைமுக பண வரவுகளையும் (வர தட்சிணை, ஆயள் காப்பீடு தொகை, மாமனார் சொத்துக்கள்). 11 இடம் தொழிலால் (10) பெறும் தன லாபத்தை காட்டுகிறது. இதில் ஒன்றுக்கொன்று எதிர் பாவங்கள் ஒன்றைஒன்று சரந்தவை, 2 பாவம் எட்டாம் பாவத்தை சார்ந்தது. 5 பாவம் 11 பாவத்தை சார்ந்தது. இரண்டாம் வாக்கு சாதுர்யம் பொறுத்தே அவனுக்கு வரும் மறைமுக தன லாபம். 5 இடமான பூர்வ புண்ணிய பழங்களை பொறுத்தே ஒருவன் பெறும் தொழில் லாபங்கள் .

ஜோதிட சூட்சமம் 23:

ஜோதிடத்தில் கேந்திரங்கள் போலவே இருக்கும் இன்னொரு கட்டமைப்பு, ஆபோக்லீமம். இது 3,6,9,12 என்ற பாவப்புள்ளிகளை குறிக்கும். மூன்றாமிடம் என்பது வீரிய மற்றும் இளைய சகோதர ஸ்தானமாகும். ஆறாமிடம் கடுமையான உடல் உழைப்பு, கடன், தவறான பழக்கத்தினால் வரும் நோய்கள், கண் முன் தெரியும் மற்றும் வெல்லக்கூடிய எதிரிகளை குறிக்கும். ஒன்பதாமிடம் பாரம்பரிய பலத்தால் ஒருவன் பெறும் பாக்கியங்கள், தந்தை, தெய்வ நம்பிக்கை, தர்மம் மற்றும் முற்பிறவி இதனை குறிக்கும். பன்னிரண்டாமிடம் மோட்சம், சயன போக இடமாகும்.

மூன்று மற்றும் ஆறு ஆபோக்லீம புள்ளிகள் என அழைக்கபடுகிறது. ஆபோக்லீம என்றால் தடைகளை தருபவை ஏனப்பொருள். ஒருவரின் வீரியமும் மற்றும் கடுமையான உழைக்கும் தன்மையும் ஒருவரின் வெற்றிக்கு வித்திடுபவை. எனவே இவை உபஜெய ஸ்தானங்கள். இதில் வீரியம் என்பது ஆயுள் ஸ்தானத்தின் எட்டாமிடம் என்பதால், இதுவும் ஆயுள் கணிக்க பயன்படும். எனவே மூன்றும் ஆறும் அகம் சார்ந்தவை. ஆறாம் பாவத்தால் உண்டாகும் நோயும் எதிரியும் தெரிந்தே ஜாதகர் ஏற்படுத்திக்கொள்வதாகும். ஒன்பது மற்றும் பன்னிரண்டு இடங்கள், புறம் சார்ந்த ஆபோக்லிம புள்ளிகள். ஒன்பதாம் இடம் என்பது பாரம்பரிய பதிவுகளை பொருத்து செயல்படும் என்பதால் இதுவும் புறம் சார்ந்தவையாகும். பன்னிரண்டு என்பது போகம், தூக்கம் மற்றும் மோட்சம் தருவது. இது லக்ன மறைவிடம் ஏன்பதில் இருந்து இது புறம் சார்ந்தவை என அறியலாம். ஒருவரின் வீரியம் (3) பாரம்பரியம் (9) பொருத்து அமையும். பாரம்பரியம் (9) வீரியம் (3) பொறுத்து பாதுகாக்கப்படும்.ஒருவரின் உழைப்பைப் (6) பொறுத்து உறக்கமும் (12) உறக்கத்தை பொருத்து உழைப்பும் இருக்கும். எனவே ஆபோக்லீம ஸ்தானங்களில் கிரகம் அமர்ந்தால் அவை தடைகளைக் கொடுக்கும் என்றும், கடின உழைப்பால் (6) மற்றும் தெய்வ பல (9) ஸ்தானங்கள் மூலம் ஜாதகர் நல்ல நிலை அடையலாம் என கொள்ளலாம்.

ஜோதிட சூட்சுமம் 24:

ஜோதிடத்தில் கர்த்தாரி யோகம் என்று ஒரு சொல் உண்டு. கர்த்தாரி என்றால் கத்திரிக்கோல் என்று பெயர். இரு கர்த்தாரி யோகங்கள் உண்டு. அவையாவன:
1. சுப கர்த்தாரி யோகம்
2. பாப கர்த்தாரி யோகம்

சுப கர்த்தாரி யோகம்:

லக்ன சுப கிரகங்களுக்கிடையே (2, 12) லக்ன அசுபன் இருப்பின், அசுபன் இருக்கும் பாவாதிபத்தியம் தரும் துன்பங்கள், இருபுறம் இருக்கும் லக்ன சுப கிரகங்களால் கத்தரிக்கப்பட்டு, லக்ன அசுபரை நன்மை செய்ய தூண்டுகிறது.
உதாரணமாக, கடக லக்னம், ஒன்பதாமிடத்தில் புதன் (லக்ன அசுபன்) அவனுக்கு 2, 12 ல், முறையே சூரியன், செவ்வாய் (லக்ன சுபர்கள்). இது நாராயண பக்தி பெருக்கும்.தந்தைக்கு சுபம் தரும்.

பாப கர்த்தாரி யோகம்:

லக்ன அசுப கிரகங்களுக்கிடையே (2, 12) லக்ன சுபன் இருப்பின், சுபன் இருக்கும் பாவாதிபத்தியம் இருபுறம் இருக்கும் லக்ன அசுப கிரகங்களால் கத்தரிக்கப்பட்டு, லக்ன சுபர் நன்மை செய்யவதை தடுக்கிறது. உதாரணமாக, சிம்ம லக்னம் இரண்டில் சூரியன் (லக்னாதிபதி) சிம்மத்தில் சுக்கிரனும், துலாமில் சனியுமிருக்க, தன வரவு குறையும், திருமண வாழ்வு இனிக்காது. ஜாதகன் வலதுகண் பாதிப்படையும்.

ஜோதிட சூட்சுமம் 25:

ஜோதிடத்தில் நட்சத்திரத்தின் முக்கிய பங்கு என்ன? ஏன் நட்சத்திரங்கள் ஒரு அங்கமாக ஜோதிடத்தில் இருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் நட்சத்திரத்தின் வல்லமையை உணர்ந்திருந்தனர். சூரியன் போல பல மடங்கு வெளிச்சமும், ஆற்றலும் கொண்டவை நட்சத்திரங்கள்.

எனவே தான், நட்சத்திரம் பற்றிய ஆய்வு செய்து அதை பற்றி விளக்கி உள்ளனர். ஒவ்வொரு நட்சத்திரத்தை ஒவ்வொரு கிரக பலத்துடனும் காரகத்துடனும் முடிவாக வெளிட்டனர். அதில் திரிகோண ஸ்தானத்தில் வரும் நட்சத்திர காரகம் இயற்கையால் ஒரே மாதிரி அமைப்பில் இருந்ததை கண்டு வியந்து, திரிகோணத்தின் மகிமை அறிந்தனர்.

வானில் ராசி மண்டலம் என்பது, பல நட்சத்திர கூட்டங்களை உள்ளடக்கியது என்கிறது விஞ்ஞானம். ஒரு கிரகம் ஒரு ராசியில் உள்ளே செல்லும் போது, நட்சத்திர கூட்டம் வழியேதான் செல்கிறது. மேலும் ஒரு பாவத்தின் ஆதிபத்திய பலனை, கிரகங்கள் நட்சத்திரம் மூலமே பெற்று தருகிறது. இதில் இருந்து நட்சத்திர சாரம் என்பதன் முக்கியத்துவம் அறியலாம்.

ஒவ்வொரு கிரகமும், சூரியனின் கட்டுப்பாட்டிலும். சூரிய ஒளியை பிரதிபலிகிறது என்பதை தாண்டி, சூரியனை போல பல மடங்கு ஒளி பெற்ற நட்சத்திரங்களில் உள்ளே செல்லும் போது, நட்சத்திர காரகதுவதையும் பூமிக்கு பிரதிபலிகிறது என்பதே முழு உண்மை. எனவே நட்சத்திர பலம் அறிய நட்சத்திர அதிபதிகளை முனிவர்கள் வகுத்து சென்றனர்.

சாரம் தரும் பலன்களின் விளக்கம்

1. லக்ன நட்பு கிரகமும் லக்ன நட்பு சார நாதனும்:

ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.

2. லக்ன நட்பு கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்

ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.

3 லக்ன எதிரி கிரகமும் லக்ன நட்பு சார நாதனும்:

ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.

4. லக்ன எதிரி கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்:

ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.

5. லக்ன நட்பு கிரகமும் லக்ன நட்பு சார நாதனும்

ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு மறைவிடத்தில் அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.

6. லக்ன நட்பு கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்

ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு மறைவிடத்தில் அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.

7 லக்ன எதிரி கிரகமும் லக்ன நட்பு சார நாதனும்

ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு மறைவிடத்தில் அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.

8. லக்ன எதிரி கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்:

ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு மறைவிடத்தில் அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.
You cannot reply to topics in this forum