LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

சோதிட சூட்சுமங்கள் - 1

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


3/9/2012, 10:24 am

சோதிடம்!

கிரக பலம் அறியும் சூட்சுமம்

லக்ன சுபர் மற்றும் அசுபரை நிர்ணயம் செய்தல். அதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது அருள் அணி பொருள் அணி.

அருள் அணி: குரு, சூரியன், செவ்வாய், சந்திரன்

பொருள் அணி: சுக்கிரன், புதன், சனி

அருள் அணி கிரகம் லக்ன அதிபதியாக வந்தால், பொருள் அணி கிரகங்கள் லக்ன பாவியாக (அ) காரகத்துவ எதிரியாக வரும்.
லக்ன பாவிகளின் பலத்தை (உச்சம், பகை, நீச்சம்) ராசி கட்டத்திலும், ஆதிபத்திய பாவத்தை
கிரகத்தின் காரகத்துவ பலத்தை ராசி கட்டத்திலும், ஆதிபத்திய பலன்களை பாவ கட்டத்திலும் ஆராய வேண்டும்.

கிரக பார்வை பற்றிய சூட்சுமம் 2

ஒரு கிரகம் தன் காரகத்துவ பலன்களை தன் பார்வையில் வெளிபடுத்தும். கிரகத்தின் பார்வை அது பெற்றுள்ள காரக பலம் பொறுத்தே வெளிப்படும். உச்சம் பெற்ற கிரகத்தின் பார்வை அருவி போலவும், ஆட்சி பெற்ற கிரகத்தின் பார்வை, அமைதியான நீரூற்று போலவும், நட்பு பெற்ற கிரக பார்வை, ஆர்பாட்டமில்லாத சுனை போலவும் இருக்கும். நீச்சம் பெற்ற கிரகம் பார்வை பலமில்லை. சுப கிரகத்தின் பார்வை சுபத்தையும், அசுப கிரகத்தின் பார்வை அசுப பலனையும் தரும். இங்கு ஆதிபத்தியம் கணக்கில் வராது. பார்க்கும் கிரகத்தின் காரகத்துவம், பார்க்கப்படும் கிரகத்தின் காரகதுவத்தை பாதிக்கும் (பரிமாறிக் கொள்ளும்). ஏனெனில் அங்கு காரக பரிமாற்றம் நிகழும்.
உதாரணமாக, குரு சனியை பார்த்தால் தன் சுப காரகத்தை சனிக்கு வழங்கும், அதே சமயம் குரு தன் சுப காரகதுவத்தை சிறிது இழக்கும். இந்த பரிமாற்றம் கிரகத்தின் காரக பலத்தை (ஆட்சி, உச்சம், நீச்சம்) பொருத்தது பார்வை பரிமாற்றம் காரகத்துவ பரிமாற்றமே என்பதை நினைவில் கொள்க. குரு ராஜ கிரகம் (பெரிய கிரகம்) என்பதால், அதன் காரகத்துவம் அடுத்த ராஜகிரகமான (பெரிய கிரகம்) சனியை தவிர வேறு எந்த கிரகத்தாலும், பாதிக்கபடுவதில்லை.

சூட்சுமம் 3

ஒரு கிரகம் உச்சம் பெற்றால், அதன் மூல திரிகோண வீட்டின் ஆதிபத்தியம், உச்சம் பெறும் கிரக காரகதன்மையால் பாதிப்படையும்.
உதாரணம்: மேச லக்னம், செவ்வாய் 10 உச்சம் பெற்றால், அதன் மூல திர்கோண வீடான மேஷம் (லக்னத்தின்) ஆதிபத்தியம் பாதிப்படையும். ஆதாவது கடினமாக ஓய்வுன்றி உழைப்பால் (10 பாவம்) ஜாதகரின் உடல் (லக்னம்) பாதிக்கப்படும்.

வக்கிரம் பற்றிய சூட்சுமம் 4

வக்கிரம் பெறும் கிரகம், லக்ன தொடர்பு அறுபட்டு, அது பாவ ஆதிபத்திய சுதந்திரம் அடையும். அதனால் அக்கிரகம் அதிக காரகத்துவ பலம் பெறும். அதனால் வக்கிரம் பெற்ற கிரகம் ஆதிபத்திய பலனை விட்டு விட்டு, தன் காரகதத்துவ பலனையே அதிகம் வெளிபடுத்தும். அதனால் வக்ரம் கிரகம் அமரும் வீட்டின் பலன்கள் ஜாதகருக்கு சரியாக கிடைக்காது அல்லது தாமதப்படும். தான் பெற்ற ஆதிபத்திய பலன்களை மாற்றி செய்யும் வக்கிரம் பெற்ற கிரகங்கள்.
அதனால் ஆட்சி பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் மத்திம பலத்துடனும், உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால், நீச்ச பலம் பெற்ற நிலையிலும், நீச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் உச்ச பலம் பெற்ற நிலையிலும் செயல்படும். வக்கிரத்தில் காரகதுவமே அதிகம் வெளிப்படும் ஏனெனில் ஆதிபத்திய சுதந்திரம் பெற்றதே காரணம்.
வக்கிரம் காரகத்துவ பலம் பற்றி பேசுவதால், சுப கிரகங்கள் வக்கிரம் நன்மை என்றும், அசுப கிரக வக்கிரம் தீமை என்றும் கூறபடுகிறது.

ஜோதிட சூட்சுமம் 5

கிரகம் பெறும் சாரம் பொறுத்து அமர்ந்த கிரகத்தின் பலன் வெளிப்படும். ஆதாவது பாவம் என்பது கோப்பை (அ) டம்ளர் (பாவம்) எனில், அந்த பாவத்தில் இருந்து கிரகம் பெறும் அதிபத்திய பலன் சாரம் (straw) மூலமே. இவை கிரக காரகதுவத்தை பொறுத்து பெறப்படும்.
1. சாரம் கொடுத்தவன் அமர்ந்த கிரகத்தின் நண்பன் எனில்
2. ஒரே அணிகள் எனில்,
3. சாரம் கொடுத்தவன் அசுபன் எனினும், தன் பாவத்திற்கு மறைந்து விட்டான் எனில்
சாரம் பெற்ற நட்சத்திர பண்புகளுக்கு ஏற்ப, நற்பலன்கள் நடைபெறும். எனவே நட்சத்திர குணங்களை அறிந்திருத்தல் அவசியம்.
உதாரணமாக, 7 அதிபதி சாரம் பெறும் நடசத்திர குணாதிசயங்கள், வாழ்க்கை துணைக்கு அமையும். சாரம் கொடுத்தவர் 7 அதிபதியின் நண்பராக இருந்தாலும், லக்ன நண்பராக இருத்தல் அவசியம். அப்பொழுதே சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

ஜோதிட சூட்சுமம் 6

சூரியனில் இருந்து சுக்கிரன் 43 பாகை விலகி இருந்தாலும், சுக்கிரன் 8 பாகைக்குள் நெருங்கி இருந்தாலும், புத்திரபேறு பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்படும். பால் சுரப்பிக்களுக்கு மிதமான வெப்பம் அவசியம் என்பதை ஜோதிடம் அழகாக அறிவுறுத்துகிறது.

ஜோதிட சூட்சுமம் - 7

மூலதிரிகோணம் பற்றிய விளக்கம்

மூல திரிகோணம் என்றால் என்ன? - மூலதிரிகோணம் என்ற கிரகத்தின் காரக வலிமை கூறும் இடமாக நம் ஜோதிட நூல்கள் விவரிகின்றன. அவை எவ்வாறு அப்படி வகுக்கப்பட்டன என்பதை கூறும் பதிவு இதுவாகும்.
விளக்கம்-மூல திரிகோணம் என்பது ஒரு கிரகம் தன் கதிர் வீச்சுகளை நிலையாகவோ அல்லது அடர்த்தியாகவோ புவியின் மீது செலுத்தும் இடம் என்பதே என் ஆராய்ச்சியின் முடிவு. அதனால் அவை நிச்சயம் ஆட்சி பெற்ற வீடாகவோ அல்லது உச்சம் பெற்ற வீடாகவோ இருக்க வேண்டும்.
மூல திரிகோண சூட்சுமங்கள்.

செவ்வாய்

காலசக்கர தத்துவத்தில், செவ்வாய் ஆட்சி பெறும் வீடான மேஷம் மற்றும் விருச்சகம் இரண்டும் ஆட்சி வீடுகள், இதில் முதல் வரும் வீடு மேஷம். அங்கு நிலை பெறும் சூரியன் உச்சம் பெற்று செவ்வாய் கதிர் வீச்சுகளை தருவதால், மேஷமே செவ்வாயின் மூல திர்கோண வீடு.

சந்திரன்

கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றாலும், ரிஷபத்தில் இருந்தே அதிக கதிர்வீச்சுகளை புவி மீது பிரதிபலிப்பதால், சந்திரனுக்கு ரிஷபமே மூல திரிகோண வீடு. மேலும், சந்திரன் நீச்சம் பெறும் விருச்சகத்தில் சூரியன் நிலை பெற்று சந்திரன் ரிஷபத்தில் இருக்கும் போது, பிரகாசமான நிலவை ரிஷப ராசியில் கார்த்திகை தீபம் அன்று காணலாம்.

சுக்கிரன்

ரிஷபத்தில் உச்சம் பெற்று சந்திரன் மூலதிரிகோண வீடாக இருப்பதால், சுக்கிரனின் அடுத்த வீடான துலாமே மூல திரிகோண வீடு. ஐப்பசி மாதத்தில் அதிகம் காம எண்ணங்கள் தோன்றுவதை சுக்கிரனின் அதிக கதிர்வீச்சு விழுகிறது என்று யூகிக்கலாம்.

சூரியன்

யாருடைய சொந்த வீடுகளையும் எடுத்து கொள்ளாமல், தன் சிம்ம வீட்டையே சூரியன் மூல திரிகோணமாக எடுத்து கொண்டுள்ளது. மேலும் உத்திராயணம் என்னும் நிலை (சூரியன் வடக்கில் பயணம் மேற்கொள்ளும் மாய தோற்றம்). உண்மையில் புவியே சூரியனின் தெற்கு திசையில் பயணம் தொடங்குகிறது. இதன் மூலம் சூரியன் தன் ஆக்ரோசமான கதிர்வீச்சினை துறந்து, சாந்தம் அடைந்து, மிதமான வெப்பத்தை புவி மீது செலுத்தும் நிலை. எனவே சூரியனின் மூலதிரிகோணம் சிம்மம்.

புதன்

புதனுக்கு ஆட்சி மற்றும் உச்சம் பெறும் வீடு ஒன்றே என்பதால், புதன் தன் கதிர்வீச்சுகளை கன்னி ராசியில் இருந்து அதிகம் புவியில் செலுத்தும். இதனால் புதனின் மூலதிரிகோணம் கன்னி.

வியாழன் (அ) குரு

மீனத்தில் காமத்தின் கிரகமான சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், குருவின் மூலதிரிகோண வீடு தனுசு. கால சக்கரத்தில் குருவின் முதல் வீடு மற்றும் தர்ம திரிகோண கடை வீடு இதுவே. குரு மிக பெரிய கிரகம், அவரின் வீச்சுகள் அதிகம் எந்தவித கிரகத்தின் இடர்பாடுகள் இல்லாமல் புவி மெது செலுத்தும் இடம் தனுசு ராசி. அதனால் அறிவியல் பூர்வமாக தனுசை குருவின் மூலதிரிகோண வீடு என்று முன்னோர்கள் கூறினர்.

சனி

சனி உருவத்தில் இரண்டாவது பெரிய கிரகம். இதுவும் குருவை போலவே தனித்து கதிர்வீச்சுகளை அதிகம் செலுத்தும் இடம் கும்பம். மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று, சனியின் கதிர்களோடு செவ்வாய் கதிர்கள் கலப்பதால், சனியின் கதிர் வீச்சின் வீரியம் குறைகிறது. எனவே, நம் முன்னோர்கள், சனியின் கும்ப ராசியை மூல திரிகோண வீடாக வைத்தனர்.

ஜோதிட சூட்சுமம் - 8

ஜோதிடத்தில் சந்திர கேந்திரங்களில் இருக்கும் கிரகங்களின் காரகத்துவங்கள், ஜாதகரின் மனதை பிரதிபலிப்பதாகவும், திரிகோணத்தில் இருக்கும் கிரகங்கள், மனதின் எழும் எண்ணங்களை தன் காரகத்துவதில் வழி நடத்தும் (அ) பாதிக்கும் புற காரணிகளாக இருக்கும். சந்திரனின் காரகத்தை அதிகம் பாதிக்கும் கிரகங்களான சுக்கிரன், ராகு, கேது மற்றும் சனி கேந்திரத்தில் இருந்தால், மனதின் செயல்பாடுகள் மேலே கூறியபடி கிரக காரதுவங்கள் மனதின் வழி வெளிப்படும். மேலே கூறிய நான்கு கிரகங்கள் சந்திர திரிகோணத்தில் இருக்கும் போது, மனதின் செயல்பாடுகள் அவர்கள் காரகத்தால் தடுமாற செய்யும். சந்திரனுக்கு குருவின் தொடர்பு கிடைக்கும் போது நல்ல வழிகாட்டி இறைவன் அருளால் கிடைக்கபெறுவார்கள்.

ஜோதிட சூட்சுமம் - 9

ஜோதிடத்தில் ராகு பிதாமகரையும் கேது மாதாமகரையும் குறிக்கிறது. ராகு தந்தை வழி முன்னோர்கள் ஜீனையும், கேது தாய் வழி முன்னோர்கள் ஜீனையும் குறிக்கிறது. இவர்கள் பாரம்பரிய கட்டுகோப்புகள், பழக்க வழக்கங்கள் திரிகோணம் எனப்படும் பாரம்பரிய முக்கோணத்தில் சேமிக்கப்படும். லக்ன திரிகோணத்தில் அல்லது திரிகோண அதிபதிகள் ராகு கேது தொடர்பு ஏற்படும் போது, ஜாதகன் பாரம்பரிய கட்டமைப்பை எதிர்க்கும் அல்லது வெளிவரும் சுழலுக்கு தள்ளப்படுவான். முன்னோர்களை வழிபடாத நிலையை, லக்ன திரிகோணங்களில் இருக்கும் ராகு கேது காட்டிகொடுத்துவிடும். இதையே நாக தோஷம் என்று கூறப்படுகிறது. சூரியனோடு சேரும் ராகு அல்லது கேது 15 பாகைகுள் இருக்கும் போது, முன்னோர்களின் ஆத்மாவை சாந்தபடுத்தாத தோசத்தை குறிக்கும். சூரியன் பித்ரு காரகன் ஆவான். இவ்வாறு சூரியனை பாதிக்கும் கேது எந்த ஆதிபத்தியத்தில் நடைபெறுகிறதோ அந்த ஆதிபத்தியமும் கடுமையாக பாதிக்கப்படும்.

ஜோதிட சூட்சுமம் - 9

திரிகோணம் பற்றிய சூட்சுமம்

ஜாதகத்தில் லக்ன திரிகோணம் மற்றும் திரிகோண அதிபதிகள் பலமுடன் இருக்க, எந்த பிரச்சனைகள் வந்தாலும் அவன் எளிதில் எதிர்கொண்டு சமாளிப்பான். ஒன்றாம் இடம் லக்னதையும், ஐந்தாம் இடம் மகனையும், ஒன்பதாம் இடம் தந்தையையும், ஒன்பதின் ஐந்தாம் இடம் திரும்ப ஜாதகரையும், ஒன்பதின் ஒன்பதாம் இடம் ஐந்தையும் குறிக்கிறது. இதன் மூலம் ஜாதகரின் தந்தையே திரும்ப ஜாதகரின் மகன் வடிவத்தில் பிறந்து பாரம்பரிய கட்டமைப்பை காக்கிறார் என்கிறது ஜோதிடம். இதுவே திரிகோணத்தில் இருக்கும் பரம்பரை கட்டமைப்பு பற்றிய விளக்கம். இவை சக்தி முக்கோணம் என்றும், சக்தி பிரமீடுகள் என்றும் தர்ம திரிகோணம் என்றும் ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் செய்யும் தான தர்மங்களின் சக்திகள் இந்த முக்கோணத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும். இதன் காரணத்தாலே புலிப்பாணி முனிவர், திரிகோணத்தில் பாதகாதிபதி வலிமை இழப்பதாக சொல்கிறார். இதில் இருந்து திரிகோணம் ஜாதகருக்கு நல்ல வழிகாட்டியாகவும், தடைகளை தகர்க்கும் முன்னோர்களின் புண்ணியங்கள் என்றால் அது மிகையாகாது.

ஜோதிட சூட்சுமம் - 10

சனியும் புதனும் திருநங்கை கிரகங்கள் என கூறக்காரணம், புதன் சூரியனின்
மிக அருகில் இருந்து ஆக்க சக்தியை இழந்து விட்டது என்பதாலும். சனி சூரியனில் இருந்து வெகு தொலைவு சென்று விட்டதாலும். புதனும் சனியும் திருநங்கை கிரகங்கள் எனப்படுகின்றன. இதில் இருந்து புதனும் சனியும் காரக பலம் பெற்று, லக்ன அதிபதியுடன் தொடர்பு பெறும் போது, சூரியன் மற்றும் சுக்கிரன் பலம் சனி புதனை விட சற்று குறையும் போது, திருநங்கை தன்மை வெளிப்படுகிறது.

ஜோதிட சூட்சுமம் - 11

கேந்திராதிபத்திய தோஷம்.
ஒரு இயற்கை சுப கிரகம் ஜாதகத்தில் ஒரு கேந்திர அதிபதியாக வந்து, அவர்கள் இன்னொரு கேந்திரம் ஏறுவது கேந்திர ஆதிபத்திய தோஷம்.
தோஷம் என்ற சொல்லுக்கு குறைபாடு என்று பொருள். கேந்திர பலம் பெற்ற அதிபதி இன்னொரு கேந்திர ஆதிபத்தியம் என்னும் உரிமை பெறும் போது, அளவுக்கு அதிகமான சுபதன்மை பெற்று, கேந்திர பலத்தை இழக்கிறார். இதனால் சுபகிரகம் அமரும் கேந்திரம் பாதிக்கபட்டு பலம் குறையும். இதுவே கேந்திராதிபத்திய தோசத்தின் சூட்சுமம்.

ஜோதிட சூட்சுமம் 12

ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் நிற்கும் நட்சத்திர பாதங்கள் போல், லக்னம் ஒரு குறிப்பிட்ட நட்சத்திர பாதத்தில் அமர்ந்திருக்கும். ஜாதகரின் குண நலன்களைப் பற்றி இந்த நட்சத்திரம் பாதம் கூறும். மேலும் இந்த நட்சத்திர அதிபதி சேரும் கிரக காரகத்துவ குணநலன்கள் ஜாதகருக்கு அமையும். பாவ சக்கரத்தில் நட்சத்திர அதிபதி தொடர்பு கொள்ளும் பாவகாரகத்துவ மேல் அதிக ஈடுபாடு இருக்கும்.

பாவங்கள் இந்த லக்ன நட்சத்திர பாதத்தில் இருந்து தொடங்குவதால், ராசி சக்கர கிரக நிலைகளும் பாவ சக்கர நிலைகளும் மாறுகின்றன. அதனால், கிரகங்களின் ஆட்சி, உச்சம்,நீச்சம்,நட்பு, பகை, கிரகசாரம் மற்றும் பார்வைகள் ராசி சக்கரத்திலும். திசை மற்றும் புத்தி பலன்கள் பாவகட்டத்திலும் காண வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பாவ ஆரம்ப நட்சத்திர அதிபதிகள் வைத்து அந்த பாவத்தின் பலம் எளிதில் அறியலாம்.

ஜோதிட சூட்சுமம் 13

குரு சனி இணைவு - ஜீவ கர்ம யோகமும் பிரம்ம ஹத்தி தோசமும்

ஜோதிடத்தில் குரு முன்னோர்களின் புண்ணியத்தை குறிப்பவராக போற்றப்படுகிறார். சனி முன்னோர்களின் கர்ம பலனை குறிபவராக போற்றபடுகிறார். குரு சனி இருவரின் சேர்க்கை ஜீவ கர்ம யோகம் என்ற நிலையை வழங்குகிறது. யோகம் என்ற சொல்லிற்கு சேர்க்கை என்று பொருள். சந்திர கேந்திரத்தில் அல்லது லக்ன கேந்திரத்தில் குரு சனி சேர்க்கை அமைவது மிக பெரிய யோகமான ஜீவ கர்ம யோகத்தை தருகிறது.
குருவும் சனியும் 5 பாகைக்குள் அமைந்து சந்திர கேந்திரத்தில் இருந்தால், அவர்கள் என்னும் எண்ணங்கள், சமுகத்தில் நல்ல மதிப்புள்ள மனிதராக வளம் வருவார்கள் ஈடேறும்.

பிரம்ம ஹத்தி தோசம்

குரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.

சூட்சுமம்-குருவின் பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணையும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம் சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம். இதனால் ஜாதகன் நினைத்த அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.
இங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும் போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வ பல குறைபாடு ஏற்படுகிறது. ஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறான முறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம். இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி தோஷம்.
ஆனால் இந்த தோஷம் மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.

ஜோதிட சூட்சுமம் 14

ஜோதிடத்தில் சனி ஒருவன் எந்த வகை கர்ம பலன்களால் பாதிக்கப்படுவார் என்பதை குறிப்பவர். ஒருவரின் ஜாதகத்தில் சனி எந்த இயற்கை பாவ கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருக்கிறாரோ, அந்த கிரக காரக பாவத்தை ஜாதகர் சுமந்து வந்திருக்கிறார்கள் என பொருள். சனி ராகுவுடன் இருந்தால் அவரின் தந்தை வழி பாட்டன் செய்த கர்ம பலன்களையும், கேதுவுடன் இருந்தால், தாய் வழி பாட்டி கர்ம பலன்களையும் சுமக்கிறார் என அர்த்தம். மேலும் இவர்கள் காரகத்துவ பாதிப்பு ஜாதகருக்கு இருக்கும். இவ்வாறு பெற்ற கர்மபலன்கள் சனி திசை புத்தி காலங்களில் வெளிப்படும்.

ஜோதிட சூட்சமம் 15

ஜோதிடத்தில் இயற்கை பாவகிரகங்கள் (சூரியன், சனி, செவ்வாய், அசுப சேர்க்கை பெற்ற புதன், தேய்பிறை சந்திரன்) கேந்திர மற்றும் திரிகோண அதிபதிகளாக வந்து, ஆட்சி உச்சம் பெற்றால், நன்மைகள் செய்வது கடினம். அவர்கள் சுப நட்பு கிரகங்கள் சேர்க்கை, பார்வை அல்லது சாரம் பெற்று லக்ன சுபத்தன்மை அடைய வேண்டும். அல்லது நீச்சபங்கம், வர்கோத்தமம் பெற வேண்டும். அப்பொழுது மட்டுமே முழு யோகம் கொடுப்பார்கள்.

சூட்சுமங்கள் தொடரும்...
You cannot reply to topics in this forum