LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

சனிப்பெயர்ச்சி 2017 - கும்பம்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 2012-07-31


on 8/12/2017, 6:57 am

கும்ப ராசி - (அவிட்டம், 3, 4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி, 1, 2, 3,ம் பாதங்கள்)

(கு, கெ, கோ, ஸ், ஸீ, ஸே, த) ஆகிய எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாகக் கொண்டவர்களும் தமிழ் – மாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்)

ராசி மண்டலத்தில் 11வது ராசியாகத் திகழ்வது கும்பராசி ஆகும். எதையும் சந்திக்கும் ஆற்றலும், நெஞ்சிலே உறுதியும் அனைவரையும் வசிகரிக்கும் ஆற்றலும் உடையவர்களாக திகழ்பவர் நீங்கள். தலைமைப் பணபும், எதையும் நன்கு சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். நல்லது, கெட்டது, எது என்று பகுத்தாய்ந்து அதன் அடிப்படையில் செயல்படுவீர்கள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற என்ணமும் சதா சிந்தித்து கொண்டும் சிந்தித்தை செயல்படுத்தவும் அதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறவும் என்ன வழிகள் என்பதை ஆராயும் திறமை உடையவர்கள்.

தெய்வ நம்பிக்கையும் ஆன்மீக சிந்தனையும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த உள்ளமும் மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாத உயர்ந்த பண்பாளர் நீங்கள். உண்மை பேசுவதையும் உள்ளதை பேசுவதையும் நல்லதே பேச வேண்டும் என்ற எண்ணம் உள்ள நீங்கள் சற்று சுய நலவாதிகளாகவும் விளங்குவீர்கள். உங்கள் மனதுக்கு சரி எனப்பட்டதை செய்யும் எண்ணம் உடையவர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சாரம் செய்த சனிபகவான் உங்கள் ராசிநாதனுமாகி அவர் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பானது என்று தான் கூற வேண்டும். உங்களது கௌரவம் அந்தஸ்து புகழ் கீர்த்தி அதிகரிக்கும், பேச்சில் நடை, உடை பாவனைகளில் மாற்றமும் ஒரு தன்னம்பிக்கையும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். இதுவரை மனதில் இருந்து வந்த பயம், பீதி, மனக் குழப்பம் நீங்கி ஒரு தெளிவு உண்டாகும். அதற்கான சரியான நபர்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும். அக்கம் பக்கம் உங்களை பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கும். உங்களை பற்றிய அறிமுகம் மற்றவர்களை சென்றடையும் காலமாகும்.

இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் பொருள் நகைகள் இவைகல் எல்லாம் கைக்கு வந்து சேரும். பேச்சால், எழுத்தால் செயலால் ஒரு சிலருக்கு எதிர்பாராத தன வரவு பொருள் வரவு கிட்டும். உடன் பிறந்த சகோதர சகோதரர்களால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். புதுப் புது உறவுகள் வந்து சேரும். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கூடும். அதே சமயம் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். அல்லது அவர்கள் உங்களை விட்டுப் பிரிவார்கள்.

மனை வீடு, வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். தாயாரால் எதிர்பாராத நன்மைகள் அமையும். அவர்கள் உடல் ஆரோக்யம் சீராக இருந்து வரும். இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற தூக்கம் குறைந்து இனி ஓரளவு நிம்மதியான தூக்கம் வந்து சேரும். உயர் கல்வி பயிலவும் அதனால் வேலை வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமையும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. நேரத்திற்கு உனவு அருந்துதல் வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்.

குடும்பத்தில் புது வரவுகள் அதாவது மருமகன் மருமகள் பேரன் பேத்திகள் போன்றவர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய படிப்பு அல்லது புதிய பயிற்சி இவற்றை மேற்கொள்ள வேண்டிய காலமிது. இதுவரை இருந்து வந்த தயக்கம் தடுமாற்றம் இவை விலகி உழைப்பு என்ற சொல்லே மேலோங்கி அதன் மூலம் பொருள் ஈட்ட உங்களுக்கு சரியான காலம் இதுவாகும்

காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு காதல் வெற்றியாகி அது திருமணத்தில் நல்லபடியாக முடியும். இதுவரை இழுபறியாக இருந்து வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். குழந்தைகளால் தேவையற்ற மனவருத்தங்கள் வேதனைகள் ஏற்படும். ஆன்மீக தெய்வீக தரிசனங்களும் ஆலய தரிசனங்களும் அடிக்கடி சென்று வருதல் வேண்டும்.

வேலையாட்களால் இதுவரை நடந்து வந்த பிரச்சனைகள் ஓய்ந்து நல்ல வேலையாட்கள் கிடைக்க வாய்ப்புகள் அமையும். மேலும் தேவையற்ற போட்டி எதிர்ப்பு, பகை, வம்பு வழக்கு கடன் விவகாரம் போன்றவற்றை முறியடிக்க கூடிய ஆற்றல்களும் அதிகரிக்கும். வேலையின் நிமித்தமாக பணியின் நிமித்தமாக தொழில் நிமித்தமாக வீடு, மாற வேண்டிய சூழ்நிலை ஒரு சிலருக்கு வந்து சேரும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விட வேண்டிய வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. வெளியூர், வெளிநாடு செல்வதில் சிறு சிறு தடைகள் ஏற்படும். மேலும் நண்பர்களால் உறவினர்களால் எதிர்பாராத தனப் பராப்தி அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை அமையும். வீட்டு வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.

வேலை (JOB) அல்லது தொழில் (BUSINESS)

இதுவரை வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தவர்களுக்கு வேலை அமையும். திருப்தியற்ற வேலை இல்லை என்றாலும் முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் விரும்பிய வேலைக்கு முயற்சிக்கவும். போட்டித் தேர்வுகளில் ஒரு சிலர் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்ல வாய்ப்புகள் அமையும். சக ஊழியர்கள் விஷயங்களில் சற்று அடக்கி வாசித்தல் வேண்டும். உயரதிகாரிகள் சற்று சாதகமாக நடந்து கொள்வர். வேலையின் காரணமாக வெளியூர் வெளிநாடு செல்வதில் சற்று தடையேற்பட்டு பின் விரும்பியவாறு நடந்தேறும். முதலாளி தொழிலாளி உறவு சற்று சுமாராகவே இருந்து வரும்.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சுய தொழில் மற்றும் சிறு தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி சார்ந்த துறைகள் நல்ல லாபகரமாக அமையும். பங்குச் சந்தை ஏற்றமாக இராது. ஏற்றுமதி இறக்குமதி சற்று சுமாரகவே இருந்து வரும். கூட்டுத் தொழில் செய்வதில் அதிக கவனம் தேவை. இரும்பு எஃகு, சிமெண்ட், உரம், மற்றும் இரசாயனத் துறைகள் நன்கு ஏற்றமாக இருந்து வரும். லாட்டரி, ரேஸ், கிளப், சுற்றுலா இவைகள் சற்று சுமாராக இருந்து வரும். உணவு, ஓட்டல், ஆடை, ஆபரணம், பிளாஸ்டிக், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும். ஆனால் லாபம் சற்று குறைந்து காணப்படும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் ஏற்றமாக இருந்து வரும். பொறியியல், மருத்துவம், இரசாயனம் மற்றும் நீர் சம்பந்தமான துறைகள் லாபகரமாக அமையும். பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு போன்ற பூமியிலிருந்து கிடைக்கும். கனிம வளங்கள், தனிம வளங்கள் நல்ல லாபகரமாக இருந்து வரும். பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள் சிறப்பாக அமையும். சாலையோர வியாபாரம் சற்று லாபகரமாக இருக்கும். நீர், கப்பல், மீன்பிடித் தொழில்கள் ஏற்றமாக இருந்து வரும். கமிஷன், ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ராக்ட் கன்சல்டன்சி இவைகள் லாபகரமாகவும் கட்டுமானம், ரியல் எஸ்டேட் சிறப்பாகவும் இருந்து வரும். பத்திரிக்கை படைப்பு, எழுத்து, தகவல் தொடர்பு, லாபகரமாகவும் அலைந்து திரிந்து தொழில் செய்பவர்கள் ஏற்றமுடன் விளங்குவர்.

விவசாயம்

பழங்கள், காய்கறிகள் உற்பத்தி அதிகரித்தும், லாபம் அதிகரித்தும் காணப்படும். எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், பூக்கள் ஓரளவு லாபகரமாக அமையும். மேலும் எதிர்பார்த்த மான்யம் கிடைப்பதில் இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். மா, வாழை, கரும்பு, நெல், கோதுமை லாபகரமாக அமையும். ஏலம், கிராம்பு, முந்திரி போன்ற பணப்பயிர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சற்று லாபகரமாக இருக்காது.

அரசியல்

அரசியல் வாழ்வு ஏற்ற இறக்கமாக இருந்து வரும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் இருந்தாலும் தலமை இடம் தேவையில்லாத பிணக்குகள் ஏற்படும். எதிரிகள் தொல்லை அதிகரித்தும் அவர்களால் முன்னேற்றத்தில் அதிக தடையும் ஏற்படும். தேவையற்ற சட்ட சிக்கல்களில் மாட்டாமல் கூடியவரை நிறைய விஷயங்களில் அடக்கியே வாசித்தல் வேண்டும். எதையும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் சூழ்நிலைக்கு ஏற்பவும் சந்தர்ப்பத்திற்கு ஏற்பவும் முடிவு எடுத்தல் வேண்டும். பணப்புழக்கம் சற்று சுமாராக இருந்து வரும்.

கலை

முழுமையாக உங்கள் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இக்காலங்களில் நீங்கள் சிறப்பெய்த முடியும். தொழிலில் போட்டி பொறாமை அதிகம் காணப்படும். எனவே உங்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை நீங்களே உருவாக்குதல் வேண்டும். சினிமா, இசை, நடனம், நாட்டியம், ஒவியம், சிற்பம், ஜோதிடம் இவை அனைத்தும் நன்றாக இருந்தாலும் பணப்புழக்கம் சற்று குறைந்து காணப்படும். பெயர், புகழ் பெறுவதிலும் கடுமையான போட்டி நிலவும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். வெளியூர், வெளிநாடு செல்லவும் ஒரு சிலருக்கு சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.

மாணவர்கள்

எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் கவனம் தேவை. தேவையற்ற உறவுகளைக் கட்டுப்படுத்தவும், உயர்கல்வி பயில வெளிநாடு செல்வதில் தடையேற்பட்டு பின் அமையும். கல்வி கடன் கிடைக்கும். விளையாட்டுகளில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் கவனமாக சென்று வருதல் வேண்டும்.

பெண்கள்

உயர்கல்வி பயில ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வர். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசுதல் கூடாது. காதல் விஷயங்களில் மகிழ்ச்சி நிலவும். ஒரு சிலருக்கு காதல் கை கூடி திருமணத்தில் முடியும். பொருளாதாரம் தாரளமாக இருந்து வரும். பணப்புழக்கங்கள் சீராக இருந்து வரும். குடும்பத்தில் புது வரவு அமையும். அதனால் நன்மை ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. திருமணம், குழந்தை பாக்யம் இவற்றில் இருந்த தடைகள் நீங்கி விடும். விவகாரத்து கேட்டவர்களுக்கு விவகாரத்து கிடைத்து விடும். ஒரு சிலருக்கு 2வது திருமனம் அமைய வாய்ப்புகள் அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும்.

உடல் ஆரோக்யம்

உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உடலில் சளித் தொல்லை இல்லாமல் கவனித்தல் நலம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். சர்க்கரை, உப்பு சத்துக்கள் இருப்பின் அவைகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளல் வேண்டும். கண் அடிவயிறு மற்றும் பாதங்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் கவனித்தல் அவசியம்.

சனிபகவானின் வக்ரம் மற்றும் வகர நிவர்த்திப் பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)

மூலம்

சனி பகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் ராசிக்கு 12ம் மற்றும் 11ம் இட்த்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்யும். காலங்களில் அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். ஊர் மாற்றம், இட மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். தேவையற்ற முதலீடுகளை தவிர்த்தல் நலம். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எதிலும் முதலீடு செய்தல் வேண்டும். அந்நிய மொழி பேசுபவர்களிடம் கவனமாக பேசி பழகுதல் வேண்டும். அவர்களால் நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். போட்டித் தேர்வில் வெற்றி பெற வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் ஒரு சிலருக்கு அமையும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக கவனம் செலுத்துதல் வேன்டும். உங்களைப் பற்றிய தேவையற்ற ஒரூ வீண் வதந்திகளை பரப்பிய வண்ணம் இருப்பர். கடன் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும்.

பூராடம்

சனி பகவான் பூராட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது உயர்கல்வி பயில ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். ஏதிர் பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வியால் நன்மை ஏற்படும். தாய் தந்தை இருவரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு இடம், மனை, வீடு, வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலையில் திருப்தியற்ற நிலை அமையும். பார்க்கும் வேலயை விட வேண்டியது வரும். வேலையில் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். சுய தொழிலும் சாதகமாக இராது. லாபம் வருவது போல் தோன்றினாலும் லாபம் கைக்கு வராது. போட்டி பந்தயங்களைத் தவிர்த்தல் நலம். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தடையேற்படும்.

உத்தராடம்

உத்தராட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடைபெறும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பும் ஒரு சிலருக்கு படிப்பின் காரணமாக வெளிநாடு செல்லும் அமைப்பும் ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். சுய தொழில்கள், கூட்டுத் தொழில்கள் சாதகமாக இருந்து வரும். ஏற்றுமதி இறக்குமதியில் அதிக கவனம் தேவை. வேலையை அவசரபட்டு விட்டு விடுதல் கூடாது. தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. வழக்குகள் இழுபறியாக இருந்து வரும். கொடுக்கல் வாங்கல் சாதகமாக அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகையால் எதிர்பாராத நன்மைகளும் மகிழ்ச்சியும் அமையும். வெளிநாட்டு பயணத்தில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும்.

கேட்டை

பார்க்கும் வேலையில் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ அலல்து வேறு வேலைக்கு முயற்சிப்பதோ கூடாது. கவனமாகச் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். விருந்து கேளிக்கைகளில் கவனம் தேவை. உல்லாசப் பயணங்களில் அதிக கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டுப் பின் இனிதே நடந்தேறும். குழந்தைகள் விஷயத்தில் தேவையற்ற மனவருத்தங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பார்க்கும் செய்திகள் சாதகமாக அமையும். சிறு தொழில்கள் குறுந்தொழில்கள் சாலையோர வியாபாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு போக்குவரத்து சாதகமாக அமையும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். வீடு மாற்றம் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். எதிர்பாராத நட்பு வட்டாரம் உருவாகும். அதனால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் நன்மையேற்படும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையில் அமர ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். மனதில் உற்சாகமும் பேச்சில் சாமர்த்தியமும் அதிகரிக்கும். இனம் தெரியாத தைரியம், வீர்யம், விவேகம் அதிகரிக்கும்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

சதய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்குப் புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். தாத்தா அல்லது தந்தையின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் சற்று தடையேற்பட்டாலும் முதலில் கிடைத்த வேலையில் அமர்வது சிறப்பானது ஆகும். வேலையில் மாற்றமும் ஒரு சிலருக்கு உத்யோகத்தில் உயர்வும் முன்னேற்றமும் சற்று தடைக்குப் பின் நடந்தேறும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். விருந்து கேளிக்கைகளில் நாட்டம் மற்றும் ஆர்வம் குறைந்து காணப்படும். முன்னோர்கள் மற்றும் கணவன் மற்றும் மனைவி மூலம் எதிர்பாரத தனவரவும் பொருள் வரவும் ஒரு சிலருக்கு வந்து சேரும். தேவையற்ற கடன் நிம்மதியை குழைக்கும், யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. குழந்தைகளால் நன்மையேற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இதுவரை கொடுத்த பணம் வராமல் இருந்தவை இனி அவைகள் கைக்கு வந்து சேரும். பணம் மட்டுமல்ல பொருள் பத்திரங்கள் இவைகளும் வந்து சேரும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். பேச்சில் சாமர்த்தியமும் அதனால் நன்மைகளும் ஏற்படும். குடும்பத்தில் புதுவரவு அமையும். புது உறுப்பினர் வரவால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குடும்பத்தில் நிலவும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். உயர்கல்வி பயில வாய்ப்புகள் கிட்டும். இதுவரை வராமல் இழுத்தடித்த பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்கள் சுமூகமாக அமையும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும். இரண்டாவது திருமணம் செய்தவர்களுக்கு இது உகந்த நேரமாகும். அடிக்கடி ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடும் ஆலய தரிசனம் தெய்வ தரிசனத்தில் நாட்டமும் அதிகரிக்கும்.சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் ஒரு பக்கம் தன்னம்பிக்கை அதிகரித்தும் அதே சமயம் அந்த தன்னம்பிக்கையை குழைக்கும் வண்ணம் தேவையற்ற விசயங்களும் நடந்தேறும். வலுவாக முயற்சி செய்தால் மட்டுமே எதிலுமே வெற்றி பெற முடியும். எதிலும் வெற்றி பெறக் கடுமையாகப் போராட வேண்டியது வரும். எப்பொழும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கப் பழகுதல் வேண்டும். உடம்பில் சோம்பல் அசத்தல் அதிகரிக்கும். உங்களது கௌரவம் புகழ் அந்தஸ்த்துக்குப் பாதிப்பில்லாமல் நடந்து கொள்ளல் வேண்டும். உங்களைப்பற்றி ஒரு வீண் வதந்தி உலவிய வண்ணம் இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். எதற்கெடுத்தாலும் போராட வேண்டியது வரும். சுய தொழில் சிறுதொழில்கள் சற்று கவனம் தேவை. உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களைப் பேசவோ எழுதவோ கூடாது.

சனி பகவானின் 7ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் இடத்தைப் பார்வை செய்வதால் உங்களது அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் அமையும். குழந்தை பாக்யம் ஓரளவு கிட்டும். வீட்டில் இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் சற்று தாமதமானாலும் அவை நல்ல படியாக நடந்தேறும். கொடுத்த பணம் பொருள் சாமன்யமாக கைக்கு வராது. பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடுதல் கூடாது. உழைப்புக்கேற்ற ஊதியம் கைக்கு வராது. இதுவரை வருத்தி வந்த நோயின் தன்மை ஒரு சிலருக்கு குறைய ஆரம்பிக்கும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் மன ஈடுபாடு அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் கடினமாக உழைத்தல் வேண்டும். இல்லையேல் வெற்றிக்கனி சாமன்யமாக கைக்கு வராது. விளையாட்டுகளில் ஈடுபாடு கூடும்.

சனி பகவானின் 10ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8ம் இடத்தைப் பார்வை செய்வதால் தந்தையாரின் உடல் நலத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கொடுத்த பணம் பொருள் கைக்கு வந்து சேராது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் சென்றுவருதல் வேண்டும். தாயாருக்கு இருந்து வந்த நோயின் தனமை குறைய ஆரம்பிக்கும். அநியாயமாக வட்டி கட்ட வேண்டியது வரும். அரசாங்க விஷயங்களில் தேவையற்ற விரையம் ஏற்படும். ஆக்ஸ்டென்ட் ஆப்ரேஷன் செய்ய வேண்டிய காலம் ஆகும். தெய்வ வழிபாட்டைக் கூட்டுதல் வேண்டும். குலதெய்வ வழிபாடு அவசியம், சகோதர, சகோதரிகளுக்கு வேலையில் இருந்த வந்த மந்தநிலை மாறி அவர்களுக்கு நல்ல வேலை அமைய வாய்ப்புகள் வந்து சேரும்.

- அபிராமி சேகர்.
You cannot reply to topics in this forum