LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

சனிப்பெயர்ச்சி 2017 - மேஷம்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 2012-07-31


on 8/12/2017, 6:45 am

மேஷ ராசி பலன்கள்: அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் இராசி அறியாவதவர்கள் பலன் அறிய.

சு, செ, சே, சோ, சொ, சை, ல, லி, லு, லோ, அ, ஆ, ஆகிய எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக்க் கொண்டவர்களும் சித்திரை மாத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்.

வான மண்டலத்தில் உள்ள ராசிகளில் முதல் ராசியான நவக்கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்த கிரகமான செவ்வாயின் வீட்டிற்கு உரியவரான மேஷராசி நேயர்களே யாரையும் வசிகரிக்கும் ஆற்றலும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் வீரமும் அதிகமான தன்னம்பிக்கையும் உடையவர்கள் ஆவீர்கள்.

உங்கள் ராசிநாதனாக செவ்வாய் பகவான் விளங்குவதால் எதிலும் முதன்மையானவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் வல்லமையும் கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் இழக்கத்தயாராகவும் இருப்பீர்கள். எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சா நெஞ்சமும் தைரியமும் வீரமும், விவேகமும் உடையவர்கள்.

உழைப்பு என்ற சொல்லுக்கு உதாரணமாக இருப்பவர் நீங்கள். அதே சமயம் அதிகமான கோபமும், படபடப்பும் யாரையும் தூக்கி எறிந்து பேசும் கர்வம் உடையவர்கள். எதிரிகளை தேடிச் சென்று பலி தீர்க்கும் சுபாவம் உடையவர்கள். பலி தீர்க்கும் எண்ணத்தையும் கோபத்தையும் விட்டொழித்தால் வாழ்க்கையில் உயர்நிலை அடைவீர்கள். என்பது மட்டும் நிச்சயம். ஏனெனில் உங்களது ராசியில் தான் சூரிய பகவான் உச்சம் பெறுகிறார். ஆக சூரியன் உச்சம் பெற்ற ராசிக்கு உரியவரான நீங்கள் அரசு அதிகாரம், செல்வம் செல்வாக்குடன் வலம்வர வாய்ப்புகள் ஏராளம். அதனால் நிதானத்துடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் உயர்நிலையை அடையலாம்.

இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் இதுகாரும் சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், மனகுழப்பங்கள், அசிங்கம், அவமானங்கள் ஏற்பட வைத்து உங்களை ஒரு வழி பண்ணிவிட்டார். வேலையில் பிரச்சனை, விபத்து, ஆபரேசன் இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார். சனி பகவானுடன் உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயும் சேர்ந்து கடந்த 6 மாதங்களாக சொல்லெனாத் துன்பங்களை கொடுத்து வந்தார்.

இப்பேர்ப்பட்ட சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அதாவது தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு மிகவும் நற்பலன் என்று தான் கூற வேண்டும். 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தெய்வ அனுகூலத்தை உண்டுபண்ணுவார். மேலும் உங்களது ராசிக்கு ராகுபகவான் – 5ம் இடத்திலும், குருபகவான் – 6ம் இடத்திலும், கேது பகவான் 11ம் இடத்திலும் சஞ்சரிப்பது ஓரளவு நற்பலன் ஆகும்.

சனிப்பெயர்ச்சியால் இதுகாறும் உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். மற்றவர்கள் உங்களை நேசிப்பது மட்டுமில்லாமல் உங்கள் நட்பை விரும்பி போற்றுவர். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள்.

பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களைப் பற்றிய செய்திகள் பரவலாக பரவும். அவை நல்லவிதமாக அமையும்.

அடிக்கடி பயணங்கள் ஏற்படும். நீண்ட தூர பிரயாணங்கள் ஏற்படும். வீடு, இடம், மனை மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். உறவினர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எடுக்கும் புது முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுப்புது விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.

தாயாரின் அன்பும் ஆதரவும் இக்காலங்களில் நன்கு அமையும். மேலும் ஒரு சிலருக்கு இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், நிறைய வீட்டு உபயோகப்பொருள்கள் வாங்க வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும். மேலும் அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில், சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் வந்து சேரும்.

விருந்து கேளிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் சற்று பொறுமையுடன் இருத்தல் வேண்டும். உங்களுடைய 5 ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் விருந்து கேளிக்கைகளில் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இருப்பினும் கடும் போராட்டத்திற்கு பின் புத்திர பாக்கியம் ஏற்படும். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு புத்ர தோஷத்தை உருவாக்குவார். பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. குழந்தைகளால் நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும்.

வேலை தேடுபவர்களுக்கும், இது காறும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். சந்தர்ப்பங்களும் சேர்த்து வரும். நல்ல வேலையாட்களால் நன்மை ஏற்படும். வழக்குகள் சாதகமாக இருந்து வரும்.

சுய தொழில் செய்ய வாய்ப்பும், தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க சந்தர்ப்பங்களும் வந்து சேரும். பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். முன்னோர்களது சொத்துகள் கிடைக்கும். அடிக்கடி ஸ்தல யாத்திரையும், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பும். வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். ஒரு சிலருக்கு 2வது திருமணமும் நடைபெற வாய்ப்பும் அமையும்.

பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் ஒரு சிலருக்கு முதலாளிகளாக உருவாகும் வாய்ப்பு அமையப்பெறும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். அவர்களால் நன்மைகள் ஏற்படும். மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டும். அவர்களால் நன்மையும் எற்படும். வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமும் திறமையும் ஒரு சிலருக்கு அமையும்.

வேலை அல்லது உத்யோகம் (Job)

உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்க்கும் காலங்களில் எதிர்பாராத வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலையும், வேலையில் உள்ளவர்களுக்கு உத்யோக உயர்வும், ஒரு சிலருக்கு ஊதிய உயர்வும் கிட்டும். அதே சமயம் ராகு 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலமாதலால் அவசரப்பட்டு வேலையை விட்டு விடுதல் கூடாது. அதனால் அடிக்கடி வேலையில் லீவு போட வேண்டி வரும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் இருந்து வரும். சக ஊழியர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். 11ம் இடத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்வது வேலையில் திருப்தி ஏற்படுத்தும்.

தொழில் (Business) வியாபாரம் (Trade)

புதிய தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். மேலும் உற்பத்தி சார்ந்த துறைகள் ஏற்றம் மிகுந்து காணப்படும். கமிஷன், ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி துறைகள் ஏற்றம் மிகுந்து காணப்படும். மருத்துவம், விஞ்ஞானம், இரசாயனம் சார்ந்த தொழில்கள் ஏற்றம் மிகுந்து காணப்படும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், கட்டுமானத்துறைகள் சற்று ஏற்றமுடன் இருந்தாலும் லாபம் குறைந்தே காணப்படும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாக அமையும். உணவு, உடை, ஆபரணத்தொழில்கள், சற்று லாபம் குறைந்து காணப்படும். சுற்றுலா, கப்பல், நீர், மீன்பிடித்தொழில்கள் சற்று லாபம் குறைந்து காணப்படும். தொருவோர வியாபாரம் சாலை வியாபாரம் சற்று சுமாராக இருந்து வரும். ஆன்மீகம், பத்திரிக்கை, தொலைக்காட்சித்துறை லாபகரமாக இருக்கும்.

அழகு சாதனங்கள், அழகு சாதனப்பொருட்கள், திரைப்பட விநியோகம் மற்றும் திரையரங்கம் சற்று லாபம் குறைந்து காணப்படும். பங்குச் சந்தை சற்று ஏற்றமாக இருந்து வரும்.

விவசாயம்

பணப்பயிர்களான தேயிலை, முந்திரி, ஏலம் லாபகரமாக இருக்கும். கனி வகைகளான வாழை கொய்யா, மா, பலா வகைகள் நல்ல விளைச்சல் ஏற்பட்டாலும் லாபம் சற்று குறைந்தே காணப்படும். ஒரு சிலர் தங்களது நிலத்தை குத்தகைக்கு விட வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமையும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டியது வரும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் ஓரளவு லாபம் ஏற்பட வாய்ப்பு அமையும். ஒரு சிலர் வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் கூடி வரும்.

அரசியல்

இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி புதிய பதவிகள் பொறுப்புகள் வந்து சேரும். மக்களிடையே ஆதரவு பெருகும். தொண்டர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வர். எதிரிகளின் தொல்லைகள் இருந்தாலும் அதை தெய்வ அனுகூலத்தால் வெற்றி கொள்ள வாய்ப்பு அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் வந்து சேரும்.

கலை

கலைத்துறை சற்று ஏற்றமுடன் விளங்கும், நடனம், நாட்டியம், ஓவியம், இசை சிறப்பாக இருந்து வரும். சினிமா ஓரளவு வருமானத்தை தரும். எழுத்தாளர்கள், பதிப்பகத்தார்கள், கதை வசனகர்த்தாக்கள், பாடலாசியர்கள் பெயர் புகழ் பெறுவர். சின்னத்திரை சற்று சுமாராக இருந்து வரும். புதிய ஒப்பந்தங்கள் ஒரு சிலருக்கு அமையும். எதிர்பார்த்த புகழும் பணமும் ஒரு சிலருக்கு வந்து சேரும். ஜோதிடம் சிறந்து விளங்கும்.

மாணவர்கள்

படிப்பில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி உயர்கல்வி பயில வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். உயர்கல்வி பயில ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல அமைப்பு கூடி வரும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். கல்வி கடன் எளிதில் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற வாய்ப்பு அமையும். 5ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வது தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டி வரும். மேலும் குரு பகவான் இக்காலங்களில் 6-7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது தேவையற்ற பிரச்சனைகளையும் படிப்பில் ஏற்படும் தடங்கல்களையும் குறிப்பிடுவதால் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

பெண்கள்

9ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் ஓரளவு தெய்வ அனுகூலம் ஏற்படும். அதே சமயம் குரு பகவான் 6-மற்றும் 7-ம் பாவங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் திருமணம் நடைபெற சந்தர்ப்பங்கள் அமையும். மேலும் இதுவரை நடவாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். மேலும் குழந்தை பாக்யத்தில் ஆரம்ப காலங்களில் தடை ஏற்பட்டு ராகு பெயர்ச்சிக்கு பின் நல்லபடியாக குழந்தை பிறக்க சந்தர்ப்பம் அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அமையும். ராகு 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் குழந்தைகளால் மன வருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும்.

கணவன் மனைவி உறவு சுமாராக இருந்து வரும். கணவரின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் கிட்டும். பார்க்கும் வேலையில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. அடிக்கடி பயணங்கள் அதிகரிக்கும். சனி 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு செல்ல் வாய்ப்புகள் வந்து சேரும். 9ம் இடம் நீண்ட தூரப் பயணத்தையும் ஆலய தரிசனத்தையும் குறிக்கும். அதே சமயம் 9ம் இடம் என்பது இரண்டாவது திருமணத்தை குறிப்பதால் ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற சந்தர்ப்பம் அமையும். உயர்கல்வி பயில வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் அமையும்.

கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் ஒரு சிலருக்கு அமையும். ஆன்மீக விஷயங்களில் மனம் ஈடுபடும். 5ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் காதல் வயப்படும் சூழ்நிலையும், காதல் கனிந்து திருமணம் நடைபெறவும் வாய்ப்பு அமையும். உடன் பணிபுரிவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உயர் அதிகாரிகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்து வருதல் வேண்டும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணுதல் வேண்டும்.

உடல் ஆரோக்யம்

உடலில் அடிவயிறு, கால் இடுப்பு, கண் போன்ற உறுப்புகளின் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உடலில் சளித் தொல்லைகள் ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியம். அடிவயிற்றில் பிரச்சனைகள் கால், மற்றும் கால் பாதங்களில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். கணையம், கல்லீரல், கண் போன்ற உடல் உறுப்புகளை நன்கு கவனித்தல் நலம்.

2. சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள்
(மூலம், பூராடம், உத்திராடம்)

மூலம்

சனிபகவானின் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வெளியூர், வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கள் சீராக இருந்து வரும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். அரசாங்கத்தால் கொளரவிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அமையும். மேலும் ஒரு சிலருக்கு அரசியலில் உயர் பதவியில் அமர வாய்ப்பு அமையும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் அமையும். அவையும் நன்மையாகவே இருந்து வரும். தெய்வ அனு கூலம் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் சற்று கவனத்துடன் இருத்தல் வேண்டும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். எடுத்த காரியங்கள் நடை பெறுவதில் உள்ள தடைகள் நிவர்த்தியாகி காரியங்கள் இனிதே நடைபெறும். நண்பர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இடம் வாங்க வாய்ப்புகளும் அல்லது வீடு கட்ட வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு வந்து சேரும்.

பூராடம்

சனிபகவான் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வேலை கிடைக்காதவர்களுக்கும் வேலை கிடக்கும். சுய தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி உடையதாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும்.எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் பரபரப்புடன் செயல்பட வைக்கும். தாயாரால் நன்மை ஏற்படும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். தாய்மாமன்களின் அன்பும் ஒத்தாசையும் கிட்டும். நண்பர்களினால் எதிர்பாராத நன்மை ஏற்படும் உற்றார், உறவினர்களால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சந்தர்ப்பமும். சூழ்நிலையும் ஏற்படும். தெய்வ பக்தி அதிகரித்து காணப்படும் நேரான பாதையில் சென்று நம்மை வழி நடத்த வாய்ப்புகள் அமையும். அதே சமயம் பெண்களால் தேவையற்ற பிரச்சனைகள். அசிங்கம் அவமானங்கள் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விலகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். அவர்களால் நன்மை மிகுந்து காணப்படும்.

உத்தராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இக்காலங்களில் ஓரளவு ஏற்றமான காலம் என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் சிறிது காலம் வேலை இலலமல் இருந்து விட்டு பின் வேறு வேலையில் அமர வாய்ப்பு அமையும். மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் அதிகரிக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும் மற்றும் விருந்து, கேளிக்கைகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். கஷ்டங்கள் இல்லாமல் உல்லாசமாக இருக்க சனிபகவான் உங்களை தயார்படுத்துவார். பாஸ்போர்ட், விசா இல்லாதவர்களுக்கு வந்து சேரும். விட்டதை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுதல் வேண்டும். கலைகளில் ஆர்வம் அதிகரிப்பதால் நற்பலன்கள் ஏற்படும்.

கேட்டை

சனிபகவான் வக்ரம் ஆகி கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் தலையிட கூடாது. எதிலும் முன் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. தேவையில்லாமல் பேசுதல் கூடாது. எதிலும் நின்று நிதானித்து பேசுதல் வேண்டும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் வருகையால் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். தான தருமங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் தள்ளி போகும் தெய்வ காரியங்களில் தடை ஏற்படும்.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இராது. முதலாளி தொழிலாளி உறவு சுமுகமாக இராது. படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் சிரமப்பட வேண்டி வரும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக இராது. மேலும் தகப்பனாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.

முன்னோர்களுடைய பணங்கள் வருவதில் தடையேற்படும் அல்லது தவணை முறையில் அந்தப் பலன்கள் வந்து சேரும். கடன்கள் பெருகி வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை அமையும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். தேவையற்ற வகையில் நம்மை பற்றிய வீண் வந்தந்திகள் உலவும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வந்து சேரும். அரசாங்கத்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனிப் பெயர்ச்சியானது ஓரளவு நல்ல பலன்களை அளிக்கும். உங்களது ராசிக்கு 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் கேது பகவான் ஆரம்பத்தில் 11ம் இடத்திலும், அதன் பின் உங்கள் ராசிக்கு 10ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் உங்களுடைய கௌரவம் அந்தஸ்த்து புகழ் அதிகரிக்கும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை தள்ளிப்போன அரசாங்க விஷயங்கள் நல்லபடியாக முடியும்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த இக்கட்டுகள் இடைஞ்சல்கள் குறைய ஆரம்பிக்கும். கூட்டுக் குடும்பத்தில் ஓரளவு நிம்மதி ஏற்படும். அத்துடன் பொருளாதார நிலையும் நன்கு அமையும். கொடுக்கல் வாங்கலில் இதுவரை இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். கொடுத்த பணம், பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும் நேரத்திற்கு உணவருந்த வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களுக்கு சுப காரியங்கள், சுப நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்பான காலமாகும்.

புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் கூடும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். வீடு, இடம், வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்புகள் ஒரு சிலருக்கு தானகவே வந்து சேரும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கோபதாபங்கள் குறையும்.

வேலை கிடைக்க வாய்ப்பும், வேலையில் எதிர்பாரத முன்னேற்றமும் ஏற்படும் சக ஊழியர்களின் அன்பும் நட்பும் அதிகரிக்கும். வேலை நிமிர்த்தமாக பிரிந்து வாழும் தம்பதியினர்களுக்கு ஒன்று சேர்ந்து வாழ வாய்ப்புகள் ஏற்படும், குழந்தை பாக்யம் எதிர்பார்த்தபடி அமையும்.

அதே சமயம் குரு 8ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் அதனால் நோய்வாய்படுவதும் அதனால் அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகளும், இக்காலங்களில் கடன்களால் தொல்லைகளும் ஏற்பட்டு விலகும். தந்தையரால் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இச்சனி பெயர்ச்சியால் நற்பலன்கள் ஏற்படும் என்றுதான் கூற வேண்டும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். பேச்சில் சாமர்த்தியமும், பொருளாதார ஏற்றமும் சாதகமாக வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபட வைக்கும் அதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி அடைய வழி வகுக்கும்.

உடலாலும் மனதாலும் பட்ட வேதனைகளும் விலகி ஓரளவு மகிழ்ச்சியும் சந்தோசமும் அதிகரிக்கும் ஒரளவு உழைப்புக்கேற்ற ஊதியமும். அதற்கேற்ப சுபச் செலவுகளும் அதிகரிக்கும். வரவேண்டிய பண வரவு மற்றும் பொருள் வரவுகள் வந்து சேரும். பத்திரங்கள், நகைகள், அடகு போனப் பொருட்கள் கைக்கு வந்து சேரும். உயர்கல்வி பயில எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு அமையும். மேலும் தாயாரின் அன்பும் அவர்களது ஒத்துழைப்பும் கிட்டும். இதுவரை ஒட்டாமல் பிரிந்து போன உடன் பிறப்புகள் தாமாகவே வந்து சேர்வர். வீடு வாங்குவதற்கான அமைப்பும் வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும்.

அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். மேலும் விருந்து கேளிக்கைகளில் மனம் ஈடுபட அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பும் ஒரு சிலருக்கு வேலையில் முன்னேற்றமும் ஏற்படும். பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை அவசரபட்டு விட்டு விடக் கூடாது. வேலையில் திருப்தியற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும். அவசரப்பட்டு வேலையை விடவோ, வேறு வேலைக்கு முயற்ச்சிக்கவோ கூடாது.

காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் அமையும். ஒரு சிலருக்கு இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபாகரியங்கள் இனிதே நடைபெறும். ஒரு சிலருக்கு வாரிசுகள் உருவாக வாய்ப்பும், சந்தர்ப்பங்களும் அமையும் வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். கடன்களும் கட்டுக்கு அடங்காமல் கூடிக் கொண்டே இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடுவது கூடாது. கல்விக்கான கடன்கள் எளிதில் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் நண்பர்களால் எதிர்பாராத மனவருத்தங்களும் ஏற்படும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சியில் சில நல்ல நற்பலன்கள் ஏற்பட கூடும். உங்களது ராசியின் 5ம் அதிபதி சூரியன், சனி உங்களது ராசிக்கு 9ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நல்ல பலன்கள் ஏற்படும். இதுவரை கிட்டாமல் போன குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயர்ந்து இதுவரை இருந்து வந்த வாட்டமும் சோர்வும் நீங்கி புத்துணர்வுடன் எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள், சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும்.

குடும்பத்தில் புதுவரவுகள் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் வம்பு வழக்குகள் மட்டுபடும் எதிரிகள் வசமாவர்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்யம் ஏற்படும் குழந்தைகளால் நற்பலன்கள் ஏற்படும். புதிய விஷயங்கள் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும் திறமையும் கூடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோய் ஏற்பட்டாலும் விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் அமையும்.

சுய தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் லாபகரமாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது எனவே முதலீட்டில் அதிக கவனம் தேவை.

வேலையாட்களால் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகராகவும் சந்தோசமாகவும் அமையும். வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் ஏற்படும் சூழ்நிலையில் கடன்களும் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். பங்கு சந்தைகள் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. மனைவியின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும். மற்றவர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும்.

எதிர்பாராத பட்டம் பரிசுகள் பெற வாய்ப்புகள் இருக்கும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக கவனம் தேவை. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. அதனால் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியமும் அங்கீகாரமும் கிட்டும் அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் நன்மைகளும் கூடும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும் உயரதிகரிகளின் ஒத்துழைப்பு இருந்தாலும் சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் ஏற்படும்.

sani peyarchi palangal 2017

சனி பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடமான தனுசு ராசியிலிருந்து 3ம் பார்வையாக 11ம் இடமான கும்ப ராசியையும் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3ம் இடமான மிதுன ராசியையும் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம் இடமான கன்னி ராசியை பார்வையிடுவார்.

சனிபகவானின் 7ம் பார்வை பலன்கள்

எடுக்கும் முயற்சிகள் சற்று கால தாமதமாகும் இறுதியில் வெற்றி கிட்டும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும் எதிர்பார்க்கும் செய்திகள் சற்று காலதாமதானாலும் நல்லபடியாகவே வந்து சேரும். 3ம் இடம் முயற்சி ஸ்தானம் என்பதால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தைரியம் ஆரம்பத்தில் குறைந்து காணப்பட்டாலும் இறுதியில் வெற்றியடைய வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பாராத ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். வீடு மாற்றம் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை தேர்வுகள் எழுதும் பொழுது ஞாபக சக்தியை அதிகரித்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களால் எதிர்பாரத ஆதாயம் ஏற்படும். வீடு வண்டி வாகனங்களை மாற்ற வேண்டியது வரும். உங்களை பற்றிய வீண் வதந்திகள் பரவிய வண்ணம் இருக்கும்.

சனிபகவானின் 10ம் பார்வை பலன்கள்

உங்கள் ராசிக்கு 6ம் இடமான கன்னி ராசியை பார்ப்பது மிகவும் நன்மையாகும். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லாமல் இருந்த உங்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமும் அங்கீகாரமும் உத்யோக உயர்வும் கிட்டும். வேலையின் நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் வாய்க்கும். கொடுத்த பணம், பொருள், பத்திரங்கள் கைக்கு வந்து சேரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். இதுவரை தள்ளிப்போன லோன் விஷயங்கள் இனிதே நடந்தேறும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். வழக்குகள் சாதகமாக அமையும் கல்விக் கடன் எளிதாகக் கிடைக்கும். உண்மையான பணியாளர்கள் அமைவார்கள். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். தாய் மாமனின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்களை வெற்றி கொள்வீர்கள். அதே சமயம் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். அடிவயிறு, நரம்பு வாயு சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும். கடன்களும் அதிகரிக்கும் வருமானமும் அதிகரிக்கும்.

சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்

சனிபகவான் 3ம் பார்வையாக உங்கள் 11ம் இடமான லாபஸ்தானத்தை அதாவது சனிபகவான் தன் வீட்டையே பார்ப்பது மிகவும் விசேஷமாகும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் விடிவு காலம் பிறந்தாச்சு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் 11ம் வீடு என்பது உங்களுடைய விருப்பம், எண்ணம், ஆசை (அபிலாஷை) பூரித்தியாகும் இடமாகும். வேலையில் முன்னேற்றமும் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படும். தெய்வீக விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் அடிக்கடி ஆலய தரிசனம். தெய்வ தரிசனம் கிட்டும் மாகன்களின் தரிசனம். சித்தர்களின் தரிசனமும் கிட்டும் குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களுக்கு சுபகாரியம் இனிதே நடந்தேறும். நண்பர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களால் எதிர்பாரத உறவுகள் வந்து சேரும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும். மருமகன்களால் எதிர்பார்த்த அன்பும் ஆதரவும் கிட்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பும், தொழில்களில் லாபம் ஈட்டவும் சந்தர்ப்பம் அமையும். விளையாட்டுத் துறையில் பரிசுகள் பெற சந்தர்ப்பமும், கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும், அமையும், மனதில் அதிக அளவில் தைரியம், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும்.

- அபிராமி சேகர்.
You cannot reply to topics in this forum